ETV Bharat / city

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: ஆலோசனை வழங்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது. இது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 6, 2022, 11:06 PM IST

Updated : Sep 7, 2022, 1:23 PM IST

சென்னை: நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றாலும், மருத்துவம் சார்ந்த துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே வேறுப் பாடப்பிரிவுகளை தேர்வுசெய்து படித்தால் சிறந்த இடத்தில் பணியாற்ற முடியும் என மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17ஆம் தேதி 497 நகரங்களில் 3570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 தேர்வர்கள் எழுதி இருந்தனர்.

முதல்முறையாக இந்தியாவிற்கு வெளியில் 14 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. http://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறும்போது, 'அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவப்படிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக சேர்ந்து படித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 10,425 மருத்துவப்படிப்பு இடங்கள் உள்ளது. அவற்றில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 5050 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் 318 இடங்களும், தனியார் மருத்துவக்கல்லூரியில் 127 பேரும் என 445 பேர் சேர்ந்துள்ளனர்.

பேராசிரியர்கள் குழு: அதேபோல், பிடிஎஸ் படிப்பில் 110 பேர் என 555 பேர் மருத்துவம், பல் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்கள் வரும் பிப்ரவரி மாதம் தேர்வினை எழுத உள்ளனர். அரசுப் பள்ளியில் இருந்து மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் சிறப்பாக படித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை விளக்கவும், சிறப்பு வகுப்பு எடுக்கவும், தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

2020-21ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 336 பேரும், பல் மருத்துவப்படிப்பில் 97 பேரும் என 433 பேர் சிறப்பாக படித்து வருகின்றனர். இவர்கள் முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி எழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர். அரசுப் பள்ளியில் இருந்து மாணவர்கள் வந்தாலும் சிறப்பாகப் படித்து வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை: நீட் தேர்வு முடிவுகள் வரவிருக்கின்றன. மருத்துவம் மட்டும் படிப்பு அல்ல. மருத்துவம் சார்ந்தப் படிப்புகளும் இருக்கிறது. நர்சிங், பாராமெடிக்கல் உள்ளிட்ட எல்லாத்துறைகளும் சிறப்பானத்துறை. எந்தத்துறையில் சேர்ந்தாலும் சிறப்பானவர்களாக வர முடியும். மருத்துவத்திற்கு அடுத்து பலத்துறைகள் இருக்கின்றன. வாய்ப்புகள் கிடைக்கும் துறையில் சேர்ந்து மனதளவில் சோர்வு அடையாமல் படிக்க வேண்டும். மருத்துவம் சார்ந்த படிப்புகளை முடிப்பவர்களுக்கு வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு இருக்கிறது' எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரும், கல்வி உளவியலாளருமான சரண்யா ஜெயக்குமார் ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறும்போது, 'நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. மருத்துவப்படிப்பு என்பது நிறைய பேருக்கு கனவு. சிறிய வயதில் இருந்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறுகிறது. சில பேர்களுக்கு மதிப்பெண் குறைந்ததால் டாக்டர் ஆக முடியாத நிலைமை ஏற்படுகிறது. வேறுத் துறைக்கு செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது.

மருத்துவத்துறையில் உள்ள பிற படிப்புகளை மறவாதீர்கள்: மருத்துவத்துறையில் மருத்துவரைவிட அதிகளவில் சம்பாத்தியத்தை கொடுக்கக்கூடிய , முக்கிய பொறுப்புகளை அளிக்கக்கூடிய வேலைகள் மருத்துவத்துறையில் உள்ளது. மருத்துவமனையில் வேலை பார்க்கும் வகையில் பணிகள் உள்ளன. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வாய்ப்புகள் கிடைத்தால் நல்லது. அதுபோன்று மதிப்பெண்கள் கிடைக்காவிட்டால் சோர்ந்துவிடக் கூடாது. மருத்துவத்துறையில் உள்ள பிறப்படிப்புகளை தேர்வுசெய்து படித்தால் அதேபோன்ற படிப்புகளை தேர்வுசெய்து படிக்க வேண்டும்.

மருத்துவம் படிப்பு கிடைக்காவிட்டால், வேறுபடிப்பு குறித்தும் திட்டமிட வேண்டும். பெற்றோர்கள் தங்களின் கனவுகளை குழந்தைகளை வைத்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். சிலருக்கு அது நடக்கவும் செய்கிறது. சிலருக்கு நடக்கவில்லை. அப்போது குழந்தைகள் மீது அழுத்தத்தை கொடுக்கக் கூடாது. மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ முடியும் என்பதற்கான நம்பிக்கையை கொடுங்கள்.

மாணவர்கள் அடுத்து படிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை பயிற்சி அளித்துள்ளனர். மாணவர்கள் பள்ளிக்கு சென்றால் அங்கு அவர்களுக்கு தேவையான படிப்பு குறித்து தெரிவிக்கப்படும். மேலும் இன்டர்நெட் என்ற உலகத்தில் மாணவர்கள் தங்களின் கேள்வியை கேட்டால் அவர்களுக்கான பதில் கிடைக்கும்' எனத் தெரிவித்தார்.

வெளியாக உள்ள தேர்வு முடிவுகள்: தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மாதிரிப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வினை எதிர்கொள்ள பயிற்சி வழங்கப்பட்டன.

இந்நிலையில் 2021-2022 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் பலர் பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதியிருக்கின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. பல்வேறு நுழைவுத் தேர்வு முடிவுகளும் வரவிருக்கின்றன.

இந்த நிலையில் உயர்கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் செயல்படவிருக்கின்றன. தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளவும் கல்லூரிச் சேர்க்கைக்காக முறையாக வழிகாட்டவும் ஆலோசனைகள் வழங்கப்படவிருக்கின்றன.

ஆலோசனைகளுக்கு அழையுங்கள்: நுழைவுத் தேர்வு மூலம் நினைத்த கல்வி நிறுவனத்தில் சேர இயலவில்லை எனினும், பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி உரிய வழிகாட்டுவதற்காக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலும், மாவட்ட அளவிலான சிறப்பு மையங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறும். அனைத்துப் பள்ளி மாணவர்களும் 14417, 104 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு அழைத்து ஆலோசனைகள் பெறலாம்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆலோசனை

அரசுப் பள்ளிகளுக்கு வழிகாட்டுதல் வேண்டி வரும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவர்கள் பெற்றோருடன் பள்ளிகளுக்கோ மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களுக்கோ செல்லலாம்.

மாணவர் யாரேனும் போட்டித் தேர்வு முடிவுகள் குறித்தோ உயர்கல்வி குறித்தோ குழப்பமான மனநிலையில் இருப்பதாகக் கண்டறியப்படும் பட்சத்தில் 14417 (அ) 104 ஆகிய உதவி எண்களுக்கோ அல்லது முதன்மைப் பயிற்சியாளர் எண்ணுக்கோ அழைத்து ஆலோசனைகள் வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கழுதைப்பண்ணை மூலம் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டும் ஐடி ஊழியர்

Last Updated : Sep 7, 2022, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.