சென்னை: இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 முதல் 35 விழுக்காடு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டத்திலிருந்து பொதுத்தேர்வு வினாக்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி சர்ச்சை கிளம்பியுள்ளன. இதன் காரணமாக குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து பள்ளி நிர்வாகம், தங்களுடையே பள்ளி அளவிலேயே வினாக்கள் தயாரித்து, திருப்புதல் தேர்வு நடத்திக்கொள்ளலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தைவான் நாட்டு காலணி தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு!