தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை மேற்கொள்வதற்கு செப்டம்பர் 9, 23 அக்டோபர் 7, 14 ஆகிய தேதிகளில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் சிறப்பு முகாம் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது.
இதில் 18 வயது நிரம்பிய (31.12.2000 அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்) புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று படிவம் (6) ஐ பூர்த்தி செய்து, தங்களை இணைத்து கொள்ள வேண்டும்.
அதேபோல், பழைய வாக்காளர்களின் பெயர் நீக்கத்திற்கு படிவம் 7ஐ பூர்த்தி செய்தும், வாக்காளர் அட்டையில் பழைய வாக்காளர்கள் தங்களது பெயர் திருத்தத்திற்கு படிவம் 8ஐயும் பூர்த்தி செய்யவேண்டும். மேலும், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8ஏ-ஐ வும், ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.