இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் விடுத்துள்ள பணி மாறுதல் ஆணையில், தற்போதைய நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், உள்துறைச் செயலாளராக நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
உள்துறைச் செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி இன்று ஓய்வு பெற உள்ள நிலையில்,
எஸ்.கே.பிரபாகர் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் பதவிக்கு அடுத்தபடியாக உள்துறைச் செயலாளர் பதவி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இப்பொறுப்புக்குக் கீழ் தான் காவல்துறை இயக்குநர் நியமனம், காவல் துறை விவகாரங்கள், பாதுகாப்பு விவகாரங்கள் ஆகியவை வரும். மேலும், இந்தத்துறை அமைச்சராக முதலமைச்சர்தான் எப்போதும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
1989 ஆம் ஆண்டு ஆட்சிப்பணிப் பிரிவைச் சேர்ந்த எஸ்.கே.பிரபாகர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.
இதையும் படிங்க: ரூ.1000 பொங்கல் தொகுப்பு திட்டம் - முதலமைச்சர் தொடக்கம்!