தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஆகியோரின் பதவிக்காலம் நாளையுடன் (ஜூன் 30) நிறைவடைகிறது.
இந்நிலையில், இப்பதவியில் புதிய அலுவலர்களை பணியமர்த்துவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியாக இருந்த ஜே.கே. திரிபாதியை, சட்ட ஒழுங்கு டிஜிபியாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரிபாதி தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் காவல்துறை உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் அவர் இரண்டு சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.