கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கானொலிக்கட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார். இதில் முதலமைச்சர்ஸ பழனிசாமி தமிழ்நாட்டின் நிதித் தேவைத் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்துவருகிறார்.
முதலமைச்சரின் முக்கிய கோரிக்கைகள்:
- கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ரூ. 3,000 கோடி நிதி வேண்டும்.
- தமிழ்நாடு அரசு தொகுப்பிலிருந்து கூடுதல் உணவு தாணியத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- மார்ச் மாதத்திற்கான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
- 2020 - 21ஆம் ஆண்டுக்கான நிதிக்குழு மானியத்திலிருந்து 50 விழுக்காடுத் தொகையை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்க வேண்டும்.
- தேசிய பேரிடர் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அத்துடன், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 9,000 கோடித் தேவைப்படுகிறது என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ராணுவ வீரர்களுக்கு பிரதமருடன் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் பழனிசாமி