சென்னை: நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தைச் செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், தனிக்குழு அமைத்து விரைவில் இத்திட்டத்தைச் செயல்படுத்துமாறும் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, தனிக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஒன்றிய அரசின் சார்பில் ஏழை பொதுமக்களுக்கு நிலம் வழங்கப்படுகிறது, இதில் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு அரசின் சார்பில் நிலம் வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளர்களைக் கண்டறிவதற்கு குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதில் வருவாய்த் துறை முதன்மைச் செயலர், கிராமப்புற மேம்பாடு பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலர், நில மேம்பாட்டு ஆணைய இயக்குநர், கிராமப்புற மேம்பாட்டு இயக்குநர் ஆகியோர் உள்ளடக்கிய குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் ஸ்டாலின்