ETV Bharat / city

'பிரதமருக்குப் பாராட்டு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்' - பொன்னார் கோரிக்கை! - Ex union minister Pon.Radhakrishnan

சென்னை: பிரதமருக்குப் பாராட்டு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னண் கோரிக்கை வைத்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்னண் செய்தியாளர் சந்திப்பு!
author img

By

Published : Oct 12, 2019, 11:24 PM IST

மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசினர். இதனையடுத்து சீன அதிபர் நேபாளத்திற்கும், மோடி டெல்லிக்கும் சென்றனர். இதில் மோடியை சென்னை விமான நிலையத்தில் இருந்து வழியனுப்ப வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னண் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்னண், 'பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு இரண்டு நாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக தமிழ்நாடு அரசு செய்திருந்தார்கள். அதற்கான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். தமிழகம் உபசரிப்பில் முன்னிலையில் இருப்பதை மீண்டும் மீண்டும் உறுதி படுத்தும் விதத்தில் உலகத்தலைவர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி இங்கு கொண்டு வந்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு நடவடிக்கையிலும் தமிழகத்தின் பெருமையை எடுத்துக்காட்டும் விதமாக செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடியையும், சீன அதிபரையும் வரவேற்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகிய தலைவர்களுக்கு நன்றிகள்' என்றார்.

பொன்.ராதாகிருஷ்னண் செய்தியாளர் சந்திப்பு!

மேலும் பேசிய அவர், 'கட்சிக்கு அப்பாற்பட்டு தமிழர்களின் முகம் ஒன்றாக பார்க்கப்பட்டது என்றும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள பிரதமர் மோடிக்கு மாநில அரசு, சிறப்பு சட்டசபையைக் கூட்டி பாராட்டுகள் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிக்க...வயல்வெளியில் உல்லாசம்: காட்டுப்பன்றி எனச் சுட்டதால் காதலன் பலி!

Intro:

Body:Visuals

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.