சென்னை: பேரறிவாளனுக்குக் கூடுதலாக 30 நாட்கள் பரோல் வழங்கி, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை பெற்றுவரும், பேரறிவாளன் சிறுநீரக தொற்றால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பரோல் நீட்டிப்பு செய்ய அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் 3ஆவது முறையாகப் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஜூலை 27ஆம் தேதி பரோல் முடியும் நிலையில், இன்று அவர் புழல் சிறை கொண்டு செல்லப்பட இருந்தார். தற்போது பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலிருந்தவாறே சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.