ETV Bharat / city

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி - தமிழ்நாடு அரசு - கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படி, பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

tn-govt-has-issued-an-order-giving-permission-to-devotees-to-worship-at-kanagasabai-in-chidambaram-natarajar-temple சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி - தமிழ்நாடு அரசு அதிரடி

author img

By

Published : May 19, 2022, 9:46 AM IST

சென்னை: கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் புகழ் பெற்ற கோயில் ஆகும். நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கனகசபை ஏறி நின்று, சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக கோயில் தீட்சிதர்கள் பக்தர்களை சிற்றம்பல மேடையில் ஏற்றி சாமி தரிசனம் செய்ய கூறி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில், கனகசபையில் ஏறி நின்று, சாமி தரிசனம் செய்ய அனுமதி வழக்க வேண்டும் என்று பலரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அரசு ஆய்வு செய்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் அருள்மிகு சபாநாயகர் (நடராஜர்) திருக்கோயிலில் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் சபாநாயகரை தரிசனம் செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். அருள்மிகு சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்துது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது.

தற்போது கரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும் ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் தொடருகிறது. இத்திருக்கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றயதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி - தமிழ்நாடு அரசு அதிரடி

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகம விதிகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி

மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு பரிசீலனை செய்து, அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின் படியும், பக்தர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Exclusive: ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம்மிக்க உடையநாதர் கோயிலை சீரமைக்க கோரிக்கை.. கண்டுகொள்ளுமா இந்து சமய அறநிலையத்துறை?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.