ETV Bharat / city

கரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் நடைமுறை - Chief Secretary of Tamil Nadu

சென்னை: கரோனா தொற்றின் தாக்கம் வலுவடைந்துவருவதால் அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இன்றுமுதல் (ஏப்ரல் 10) அவை நடைமுறைக்கு வருகின்றன.

author img

By

Published : Apr 10, 2021, 6:39 AM IST

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமெடுத்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் நேற்று மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கரோனா பரவலைத் தடுக்க முன்னதாக நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை இன்றுமுதல் நடைமுறைக்குவருகின்றன.

கரோனா கட்டுப்பாடுகள்:

  • கரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை.
  • வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்படத் தடை. அதேபோன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லறை வியாபாரக் கடைகளுக்கும் தடைவிதிப்பு.
  • திரையரங்குகளில் 50 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா செல்லும் பேருந்துகளில் நின்று செல்ல அனுமதியில்லை, அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி.
  • பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம்.
  • கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை 200 பேருக்கு மிகாமல் நடத்தலாம்.
  • சீருந்துகளில் (டாக்ஸி) ஓட்டுநருடன் சேர்ந்து மூவரும், ஆட்டோவில் ஓட்டுநருடன் சேர்ந்து இருவரும் மட்டுமே பயணிக்க அனுமதி.
  • மாவட்ட, மாநகரப் பேருந்துகளில் அமர்ந்துசெல்ல மட்டுமே அனுமதி
  • சின்னத்திரை, திரைப்படங்களுக்கு அனுமதி. இருப்பினும் நடிகர், நடிகர்கள், தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், உரிய வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதியில்லை, ஆனால் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி.
  • தேநீர்க் கடைகள், உணவங்களில் 50 விழுக்காட்டினருக்கு மட்டும் அனுமதி.
  • வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் கொண்டுவர வேண்டும்.
  • பொழுதுபோக்குப் பூங்கா, வணிக வளாகங்களில் 50 விழுக்காட்டினருக்கு மட்டும் அனுமதி.
  • கல்வி, சமுதாயம், பொழுதுபோக்கு கலாசார நிகழ்வுகளில் உள் அரங்குகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி.
  • திருமண நிகழ்வில் 100 பேர் மட்டுமே அனுமதி.இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.