ETV Bharat / city

வாடகைக்கு விடப்படுகிறது அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம் - anna centenary library

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம் வாடகைக்கு விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகம்
author img

By

Published : May 31, 2019, 11:52 AM IST

இது தொடர்பாக, பொது நூலகத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தெற்காசியாவில் உள்ள பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் சுமார் எட்டு ஏக்கர் பரப்பளவில், 3.75 லட்சம் சதுர அடியில் தரைதளம், எட்டு மாடிகள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளை கொண்டுள்ளது.

இந்த நூலகத்தில் 1,280 நபர்கள் அமரக்கூடிய அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலையரங்கில் அரசு விழாக்கள், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, பள்ளி ஆண்டு விழா, கலை மற்றும் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், தேசிய, மாநில அளவிலான தொழில்சார் மாநாடுகள், சென்னையில் செயல்படும் தூதரகங்கள் நடத்தும் கொள்கை குறித்த கூட்டம், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள், குழுமம் நடத்தும் ஆண்டு பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிக்கு அரசின் விதிகளின்படி வாடகைக்கு விடப்படுகிறது.

இந்த கலை அரங்கிற்கு ஒரு நாள் வாடகையாக இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 224 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலை, கலாசார, பண்பாடு நிகழ்ச்சிகள், புத்கத வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தில் 60 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்பட்டு, ஒரு நாள் வாடகையாக 92 ஆயிரத்து 490 மட்டும் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

வாடகைக்கு  அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம்
சென்னை,

 பொது நூலகத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்காசியாவில் உள்ள பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில், 3.75 லட்சம் சதுர அடியில் தரைதளம் மற்றும் 8 மாடிகள் முற்றிலும் குளிருட்டப்பட்ட நவீன வசதிகளை கொண்டுள்ளது.
இந்த நூலகத்தில் 1280 நபர்கள் அமரக்கூடிய அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முற்றிலும் குளிருட்டப்பட்ட கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலையரங்கில் அரசு விழாக்கள், பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா, பள்ளி ஆண்டு விழா, கலை மற்றும் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், தேசிய, மாநில அளவிலான தொழில்சார் மாநாடுகள், சென்னையில் செயல்படும் தூதரகங்கள் நடத்தும் கொள்கை குறித்த கூட்டம், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள், குழுமம் நடத்தும் ஆண்டு பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிக்கு அரசின் விதிகளின் படி வாடகைக்கு விடப்படுகிறது.
இந்த கலை அரங்கிற்கு ஒரு நாள் வாடகையாக 2,31,224 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கலை,கலாச்சார பண்பாடு நிகழ்ச்சிகள் மற்றும் புத்கத வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தில் 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு, ஒரு நாள் வாடகையாக 92,490 மட்டும் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.