ETV Bharat / city

ஆயுதபூஜை, விஜயதசமிக்கு ஆளுநர் வாழ்த்து

author img

By

Published : Oct 3, 2022, 1:39 PM IST

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து
தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து

சென்னை: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, தமிழ்நாடு மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, நமது மக்களுக்கு வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். துர்கா தேவி, நம் மக்களை ஒரே குடும்பமாய் ஒன்றிணைத்து, அனைத்து தடைகளையும் தகர்த்து நமது தேசிய இலக்கை அடைவதற்கான வலிமையை நமக்கு வழங்கட்டும்.

நம் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும், பாசமும் சகோதரத்துவமும் கொண்ட ஒரே குடும்பம் போல ஒருங்கிணைந்த உணர்வில் இந்த பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு நமது மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்.என். ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.