இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவு செய்தி தனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். மேலும் ஒரு வெற்றிகரமான வணிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தவர்.
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக 2006ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இருந்தவர். அவரின் இழப்பு தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது ஆன்மா கடவுளின் நிழலில் இளைப்பாற ஓய்வெடுக்கும் படி வேண்டிக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வசந்தகுமாரின் சமூக செயல்பாடுகள் மதிக்கத்தக்கவை - மோடி புகழ் அஞ்சலி