ETV Bharat / city

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு உரிய நடவடிக்கை - ministers scandal case

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறைகளின் விளக்கத்தைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jul 23, 2021, 10:51 PM IST

பாமக தலைவர் ஜி.கே. மணி 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "முதலமைச்சர்களாக ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் இருந்தபோது அதிமுக அமைச்சர்கள், மூத்த அலுவலர்கள் எனப் பாகுபாடு இல்லாமல் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை, கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதல், ஆற்று மணல் அள்ளுதல், பாலில் கலப்படம், முட்டை, பருப்பு கொள்முதல் என்று அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

200 பக்க ஊழல் பட்டியல்

இது குறித்து ஆளுநர் ரோசையாவிடம் 2013, 2015ஆம் ஆண்டுகளில் 200 பக்கங்களைக் கொண்ட பட்டியல் பாமக சார்பில் அளிக்கப்பட்டது. அதனை ஆளுநர் 2015ஆம் ஆண்டே தலைமைச் செயலருக்கு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜூலை 23) மீண்டும் ஆர். மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், அரசு வழக்கறிஞர் கிருஷ்ணராஜா ஆகியோர், இந்த ஊழல் புகார்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சட்டத்திற்குள்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க அமைச்சர்கள் மீது இரண்டாம் கட்ட புகார் அளித்த திமுக!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.