சென்னை: தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
மேலும், "30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனங்கன்றுகளை முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பனை மரங்களை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள் மானியத்தில் வழங்கப்படும். பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும். ரூ. 3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்" என்றும் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது குறிப்பிட்ட நியாய விலைக் கடைகள், அமுதம் அங்காடிகள் ஆகியவை மூலம் பனைவெல்லம் விநியோகம் செய்ய அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், இதில் குடும்ப அட்டைதாரர்களை பனை வெல்லம் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 100 கிராம் முதல் ஒரு கிலோ வரை பனை வெல்லம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுதந்திர வரலாற்றை சுமந்து நிற்கும் சேவாகிராம்