சென்னை: கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட முடியாத சூழல் நிலவுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு, சத்துணவுப் பொருள்களான அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் சத்துணவுப் பயனாளிகளுக்கு விநியோகம் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவியருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள்களில் மாணவ மாணவியரோ அல்லது அவர்களின் பெற்றோர்/பாதுகாவலர்களோ சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கல்வி உதவித் தொகைக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு தேதி மீண்டும் மாற்றம்