சென்னை: கர்ப்பிணிகளின் பேறுகால விடுப்பு ஒன்பது மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்ட நிலையில், வாடகைப்படி ரத்துசெய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 1980ஆம் ஆண்டுமுதல் பேறுகால விடுப்பு மூன்று மாத காலம் இருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ஆறு மாத காலமாக உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து 2016ஆம் ஆண்டு 110 விதியின்கீழ் ஒன்பது மாத காலமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார் ஜெயலலிதா. 2021ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஒன்பது மாத காலத்தை 12 மாதமாக உயர்த்துவதாக அறிவித்தது.
இந்த நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் - வாடகைப்படி ரத்து அறிவிப்பால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும்' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்