ETV Bharat / city

தேர்தல் பணியாளர்கள் தபால் வாக்குகளை செலுத்த முடியும்: சத்யபிரதா சாஹூ - tamilnadu

சென்னை: தபால் வாக்குகள் எண்ணப்படும்வரை பெறப்படும் என்பதால் தேர்தல் பணியாளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்த முடியும் என தமிழ்நாட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

sahu
author img

By

Published : Apr 8, 2019, 3:31 PM IST

தமிழ்நாட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தபால் ஓட்டுக்கள் இன்னும் மூன்று மாவட்டங்களிலிருந்து வரவேண்டியுள்ளது. 3,27,903 விண்ணப்பங்கள் இதுவரை தபால் வாக்குகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளன. 2,38,051 தேர்தல் பணிகளுக்கான சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை வைத்துக்கொண்டு அருகாமையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியும். இதுவரை தபால் வாக்குகள் 47,610 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இன்னும் சில மாவட்டங்களில் தபால் வாக்குகள் வரவேண்டியுள்ளதால் இறுதி எண்ணிக்கை விரைவில் தெரிவிக்கப்படும்.

தபால் வாக்குகள் எண்ணப்படும் வரை பெறப்படும் என்பதால், தேர்தல் பணியாளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தமுடியும். காவல்துறையினருக்கு தபால் வாக்குகளும் தேர்தல் பணிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் மற்றும் அரசுப் பணி அல்லாதவர்களுக்கும் தபால் வாக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் செலுத்த இயலாதவர்கள் இ.டி.சி எனப்படும் தேர்தல் பணிக்கான சான்றிதழ் மூலமும் அருகாமையில் உள்ள வாக்கு மையங்களில் வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலை பொறுத்தவரை அனைத்து பணிகளும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில் செயல்படுத்தப்படுகிறது. ரூ.49.03 கோடி இதுவரை வருமானவரித் துறையால் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.36.79 கோடி தனி நபர்களிடமும், மீதித்தொகை ஒட்டுமொத்தமாகவும் கைப்பற்றப்பட்டுள்ளது” என்றார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 08.04.19

தபால் வாக்குகள் வாக்குகள் எண்ணப்படும் வரை பெறப்படும் என்பதால், தேர்தல் பணியாளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்த முடியும்; சத்தியபிரதா சாஹூ...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ பத்திரிக்கையாளர் சந்தித்தார். அப்போது, 
தாபால் ஓட்டுக்கள் இன்னும் மூன்று மாவட்டங்களில் இருந்து வர வேண்டியுள்ளது..
3,27,903 தாபால் வாக்குகள் அளிப்பதற்காக விண்ணப்பங்கள் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது.. சம்மந்தப்பட்ட தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் தங்களது வாக்குகளை தாபால் மூலம் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது..

2,38,051 தேர்தல் பணிக்களுக்கான சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த சான்றிதழ் வைத்துக்கொண்டு அருகாமையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியும்..
இதுவரை தபால் வாக்குகள் 47610 பெறப்பட்டுள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் வர வேண்டியதுள்ளதால் இறுதி எண்ணிக்கை விரைவில் கொடுக்கப்படும்..

தபால் வாக்குகள் வாக்குகள் எண்ணப்படும் வரை பெறப்படும் என்பதால், தேர்தல் பணியாளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்த முடியும்..
காவல்துறையினருக்கு தபால் வாக்குகளும், தேர்தல் பணிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.. அரசு அதிகாரிகள் மற்றும் அரசுப் பணி அல்லாதவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.. தபால் வாக்குகள் செலுத்த இயலாதவர்கள் இ.டி.சி எனப்படும் தேர்தல் பணிக்கான சான்றிதழ் மூலமும் அருகாமையில் உள்ள வாக்கு மையங்களில் வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த தேர்தலை பொறுத்தவரை அனைத்து பணிகளும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் மாறுபடும்..
காவல்துறையினருக்கு 24971  தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
10657 தேர்தல் பணிக்கான சான்றிதழ் தேவை உள்ளது..
தேர்தல் பணியின் போது, உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு 10 லட்சம் கொடுக்கப்படும்..

49.03 கோடி இதுவரை வருமானவரித் துறையில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 
36.79 தனி நபர்களிடமும், மீதித் தொகை ஒட்டுமொத்தமாகவும் கைப்பற்றப்பட்டுள்ளது.. 
தமிழகத்தில் இதுவரை 113 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
திருவள்ளூரில் நேற்று அதிகப்படியாக
1.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

வேலூர் பணம் பறிமுதல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித் துறையால் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.. விரைவில் நடவடிக்கை இருக்கும்.. இது தொடர்பாக காவல்துறையிடமும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது..
தேர்தல் தொடர்பாக புகார்கள் பாஜக 4 புகார்கள் மீது நொட்டீஸ் கொடுக்கப்பட்டதில் - 2 பதில் வந்துள்ளது, 
அதிமுக மீதான 10  புகார்கள் குறித்து அனுப்பப்பட்ட நோட்டீஸ்களில்  5 பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக மீதான  16 புகார்களில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு 7 பதில்கள் வந்துள்ளது.
சிபிஎம் மீதான  2புகார்கள், 
காங்கிரஸ் மீதான  1 புகார்
மற்றும் பிற பதிவுபெற்ற கட்சிகளுக்கு 5 புகார்களில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் மொத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி வாக்காளர் பயன்படுத்த ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் ஒரு தள்ளு வண்டி இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.