வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த வாரம் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இதனால் கடலூர், சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதனையடுத்து தற்போது தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளது. இது புயலாக மாற இருக்கிறது. புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் தென்தமிழ்நாட்டில் அதீத கனமழை பெய்ய வாய்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் மழை வெள்ளம், இடி மின்னல் போன்ற காலங்களில் பொது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க...புரெவி புயல் முன்னெச்சரிக்கை : அணைகளை கண்காணிக்கக் குழு