சென்னை: நமக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்னைகள், அண்ணன் தம்பி பிரச்சனை போன்றது, அவற்றையெல்லாம் விலக்கி வைத்து விட்டு வெற்றிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட வேண்டும். 2021 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, அந்த வெற்றிக் கனியை ஜெயலலிதா நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்று ஓ. பன்னீர்செல்வம் அதிமுக புரட்சி தலைவி அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
இந்தப் பேச்சு சசிகலா மற்றும் தினகரன் உடன் இணைந்து வருகின்ற சட்டப்பேரவை தேர்தலை அதிமுக எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக புரட்சி தலைவி அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அம்மா பேரவை செயலாளரும் வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
திமுக என்னும் தீய சக்தி
கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டு மக்களின் அனைத்து இல்லங்களிலும் ஜெயலலிதாவின் திட்டம் சென்று சேர்ந்து இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிய மாளிகையை நாம் கட்டி காப்பாற்ற வேண்டும். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காட்டிய பாதையில் நடந்தால் நம்மை வெல்ல யாரும் இல்லை.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் நமது பணி தலையாய பணியாக இருக்க வேண்டும். திமுக என்ற தீய சக்தியை விரட்டவே அதிமுக வை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். நாம் 1000 ( திட்டங்கள் ) கொடுத்தால் மற்ற கட்சிகள் ஒன்று இரண்டு கொடுக்கிறார்கள். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் எந்த கெட்ட பெயரும் மக்கள் மத்தியில் இல்லை. இவற்றை வாக்குகளாக மாற்றும் கடமை நமக்கு உள்ளது.
சசிகலா- தினகரன் மறைமுக அழைப்பு?
நமக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்னைகள் அண்ணன் தம்பி பிரச்னை போன்றது. இவற்றையெல்லாம் விலக்கி வைத்து விட்டு வெற்றிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட வேண்டும். 2021 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, அந்த வெற்றிக் கனியை ஜெயலலிதா நினைவிடத்தில் சமர்ப்பிப்போம். முன்னதாக புரட்சிதலைவி அம்மா பேரவை கூட்டத்தில் தமிழ்நாட்டில் தீய சக்திகள் தலையெடுப்பதை முறியடித்து, ஒரு குடும்பத்தின் ஏகபோக வாரிசு அரசியலை அடியோடு வேரறுத்து ஜெயலலிதாவின் கனவினை நினைவாக்க தேர்தல் பணியினை முன்னெடுத்து சென்று அதிமுக அரசு மீண்டும் தொடர்ந்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உதயநிதிக்கு கண்டனம்
நமக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்னைகள், அண்ணன் தம்பி பிரச்சனை போன்றது. அவற்றை எல்லாம் விலக்கி வைத்து விட்டு வெற்றிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட வேண்டும். 2021 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக்கனியை ஜெயலலிதா நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்ற ஓ. பன்னீர்செல்வத்தின் பேச்சு சசிகலா மற்றும் தினகரன் உடன் இணைந்து வருகின்ற சட்டப்பேரவை தேர்தலை அதிமுக எதிர்கொள்ளும் என்று தெரிகிறது.
ஏனெனில் அண்ணன் தம்பி பிரச்சனை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்யிடம் இல்லை என்று ஏற்கனவே அமைச்சர்கள் சிலர் கூறி வந்த நிலையில், நேரடியாக ஓபிஎஸ் சசிகலா மற்றும் தினகரனை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் என்று இந்த கருத்தில் தெரியவருகிறது.
தற்போது சசிகலா ஜனவரி 27ஆம் தேதி வரவுள்ள நிலையில் அதிமுகவில் அடுத்தடுத்து சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர். மேலும் வெளிப்படையாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடத்திய அதிமுக போராட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து, பெண்களை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
சசிகலாவுக்கு அமைச்சர்கள் ஆதரவு
ஏற்கனவே அமைச்சர் ஓ.எஸ். மணியன் சசிகலா விடுதலையானதும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று கருத்தை தெரிவித்திருந்தார். சசிகலாவுக்கு ஆதரவாக தற்போது அமைச்சர்கள் பேசத் தொடங்கிஉள்ளனர்.
மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க சசிகலா மற்றும் தினகரனுடன் இணைந்து வருகின்ற சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று அதிமுக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : கருணாநிதி முன்னிலையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்த அநியாயம்!