நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரம் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலுடன் நடக்கிறது.
தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இதில் புதுச்சேரி உள்பட பத்து தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. தேசிய கட்சியான காங்கிரஸ் தனது வேட்பாளர்களை இதுவரை அறிவிக்காமல் உள்ளதற்கு, உள்கட்சி பிரச்னையினால்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.