ETV Bharat / city

காட்பாடியில் பொதுப்பணித் துறையின் புதிய அலுவலகக் கட்டடம்: ஸ்டாலின் திறந்துவைப்பு - inaugurates public works building in Katpadi at a cost of Rs 27 lakh crore

காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம், உபகோட்ட அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

sd
dd
author img

By

Published : Nov 16, 2021, 1:22 PM IST

Updated : Nov 16, 2021, 2:04 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (நவம்பர் 16) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொதுப்பணித் துறை சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம், உபகோட்ட அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைத்தார்.

இவ்வலுவலகக் கட்டடம் தரை, இரண்டு தளங்களுடன் மொத்தம் ஆறாயிரத்து 495 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மின் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மழைநீர் சேகரிப்பு வசதி, சுற்றுச்சுவர் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, அத்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் தயானந்த் கட்டாரியா, முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடம்) இரா. விஸ்வநாத், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'அடுத்த வாரத்திற்குள் மாநிலங்களுக்கு ரூ. 95.082 கோடி நிதி பகிர்ந்தளிக்கப்படும்'

Last Updated : Nov 16, 2021, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.