கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரி, வெலிங்டன் ஏரி, பெருமாள் ஏரி உள்பட அனைத்து ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டின. இதைத் தொடர்ந்து ஏரியிலிருந்து நீர் தற்போது வெளியேற்றப்பட்டுவருகிறது.
அதுமட்டுமின்றி, தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையால், சிதம்பரம் சாலையில் உள்ள பூவனிகுப்பம், ஆலப்பாக்கம் பகுதிகளில் சம்பா பயிரிடப்பட்டிருந்த 20ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கியுள்ளன. இன்னும், இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மழை பெய்யாவிட்டாலும் விளைநிலத்திலிருந்து தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பிருப்பதுபோல் தெரியவில்லை.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வுமேற்கொள்கிறார்.
இதையும் படிங்க...பாம்பேஸ்வரர் சங்கீத மலை!