இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
”மத்திய நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் அமைச்சராகவும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவாகவும் விளங்கிய அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் அதிர்ச்சியும், மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.
அருண் ஜேட்லி தன்னுடைய மாணவர் பருவத்தில் கல்வித் திறன் மற்றும் பிற கல்வி சாரா செயல்பாடுகளுக்காக பாரட்டுக்கள் பெற்றுள்ளார். டெல்லி பல்கலைகழகத்தின் மாணவர் சங்கத் தலைவராகவும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் இருந்துள்ளார்.
இந்திய நாட்டின் நீதத் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், மக்களின் நன்மை மற்றும் நாட்டின் பொருளதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகப்படு்த்தினார்.
பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழகக் கூடிய பண்பாளர்.
அருண் ஜேட்லி மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவர் கட்சித் தொண்டர்களுக்கும், இந்திய நாட்டுக்கும் பேரிழப்பாகும்.
அவரை இ்ழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.