சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்தார்.
அப்போது அவர், பாஜக ஆதரவாளர்களையும், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களையும் பொய் வழக்குப் போட்டு கைது செய்யும் திமுக அரசைக் கண்டித்தும், தேச இறையாண்மைக்கு எதிராகவும், முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தைக் கொச்சைப் படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தார்.
இந்த சந்திப்பின் போது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிகே சரஸ்வதி, மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், மாநிலச் செயலாளர் டால்ஃபின் ஸ்ரீதர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஜெ. தீபா, ரஜினி குறித்து திருவாய் மலர்ந்த செல்லூர் ராஜூ