ETV Bharat / city

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள்! - தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள்

tn assembly session today sep 15 -  LIVE
tn assembly session today sep 15 - LIVE
author img

By

Published : Sep 15, 2020, 9:55 AM IST

Updated : Sep 16, 2020, 8:37 AM IST

16:27 September 15

கரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதை பொதுமக்கள் தடுப்பதை தடுக்கும் அவசரச் சட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். இந்த புதிய திருத்தச் சட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களை புதைத்தல் மற்றும் எரியூட்டல் செய்ய முயலும்போது தடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேரவை பிற்பகல் 2.40 மணியளவில் நிறைவடைந்ததாக பேரவை தலைவர் தனபால் அறிவித்தார். 

14:33 September 15

ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்

14:05 September 15

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

13:10 September 15

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார்.

12:44 September 15

கரோனா பாதிப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, பேரவையில் ஸ்டாலின் கோரிக்கை.

12:31 September 15

நீட் தேர்வை மீண்டும் மீண்டும் கொண்டு வந்ததற்கு யார் காரணம்?  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

நீட் தேர்வை யார் கொண்டு வந்தார்கள் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். நீட் தேர்வு, திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. நாட்டையே குட்டி சுவராக்கியது திமுக-காங்கிரஸ் கூட்டனி தான். நீட் தேர்வு விவகாரத்தில், 13 பேர் உயிரிழப்புக்கு காரணம் திமுக தான் என்றும், நீட் தேர்வு பிரச்சனைக்கு காரணம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான் என்றும், பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார்.

12:13 September 15

நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை. ஊழல் ஆட்சி நடந்து வருகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி எங்களை வெளியேற்றிவிட்டனர் என்று கே.ஆர்.ராமசாமி குற்றம்சாட்டினார்.

12:04 September 15

சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டது ஏன் என்பது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி

12:02 September 15

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை பேரவையிலிருந்து வெளியேற்ற  பேரவைத் தலைவர் உத்தரவு. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார் என்றார். இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர்களை பேரவையில் இருந்து வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

12:00 September 15

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிவருகிறார்.

11:53 September 15

கரோனா காலத்தில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை தமிழ்நாட்டில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 444 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. கரோனா தொற்றால் பாதிப்படைந்த 4 ஆயிரத்து 620 கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

11:46 September 15

தமிழ்நாட்டில் ரூ.12.78 கோடி மதிப்பீட்டில் முதல்வர் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம்

தமிழ்நாடு முழுவதும் குறை தீர்ப்பு மையங்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. குறைகளை விரைந்து களைவதற்கும், பொது மக்கள் வசதிக்காகவும், முதல்வர் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம், ரூ.12.78 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், முதல் கட்டமாக 100 இருக்கைகள் கொண்டு செயல்படுத்தப்படும் என, பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

11:44 September 15

நீட் தேர்வு விவகாரம்: ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, பேரவையில் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2010 ஆம் ஆண்டு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தது என்றார்.

11:27 September 15

தமிழ்நாட்டில் மேலும் 10 புதிய கல்லூரிகளுக்கு அனுமதி

வட சென்னையில் பாரதி மகளிர் பெண்கள் கல்லூரி மட்டுமே உள்ளது. வட சென்னையில்  6 சட்டப்பேரவை தொகுதிகளையும் உள்ளடக்கியதாக, இக்கல்லூரி அமைந்துள்ளது. இங்குள்ள பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில், ஆண்டுதோறும் மாணவிகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. எனவே அக்கல்லூரியில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தவும், கூடுதல் கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும் என, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சேகர் பாபு கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த உயர்கல்வி அமைச்சர் அன்பழகன்,  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.210 கோடி நிதி ஒதுக்கியும், கட்டடங்கள் கட்ட ரூ.150 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாரதி பெண்கள் கல்லூரியில், கரோனா பரவல் காரணமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. தற்போது கட்டடங்கள் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பிய பிரிவுகளில் கூடுதலாக 20 விழுக்காடு மாணவர்கள் சேர்க்கையில் ஒதுக்கீடு செய்து மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாணவிகள் சேர்க்கை அதிகப்படுத்தப்படும். அதேபோன்று 15 விழுக்காடு அரசு உதவி பெறும் கல்லூரிக்கும், 10 விழுக்காடு தனியார் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி, தமிழ்நாட்டில் அரசு பெண்கள் கலை கல்லூரிகள் குறைவாக உள்ளன என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர், கடந்த 2011 முதல் தற்போது வரை 92 கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இந்தாண்டு 10 புதிய கல்லூரிகள் அமைப்பதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார் என்றார்.

11:01 September 15

பேரவைத் தலைவருக்கு நன்றி, முதலமைச்சருக்கு புகழாரம்

கரோனா நெருக்கடியிலும் பேரவை நடத்த சிறப்பான ஏற்பாடுகள் செய்த பேரவைத் தலைவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்தார். கரோனா நெருக்கடி காலத்திலும் மக்கள் பணியே முக்கியம் என்று தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம் சூட்டினார்.

10:26 September 15

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் 23 நகரும் நியாயவிலைக்கடைகள் தொடங்கப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 90 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு நகரும் நியாயவிலைக்கடை செயல்பட்டு வருவதாகவும், ஒரே நேரத்தில் 3,501 நகரும் நியாயவிலைக்கடைகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது என்று தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ இவ்வாறு பதிலளித்தார்.

10:24 September 15

அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து: ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமொழிக்கொள்கைக்கு தீர்மானம் கொண்டு வந்தவர் அண்ணா. அவர் கொண்டு வந்த இருமொழிக் கொள்கைக்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. அதை அனைவருமே ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என, பேரவையில் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

10:11 September 15

'நிகழாண்டில் 50 மேல்நிலைப்பள்ளிகள், 50 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது' அமைச்சர்

பள்ளிகள் தரம் உயர்த்தப்படுமா என்று திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் எழுப்பிய கேள்விக்கு, இந்த ஆண்டில் மட்டும் 50 மேல்நிலைப்பள்ளிகள், 50 உயர் நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். திருப்பூர் குமரானந்தபுரத்திலுள்ள பெண்கள் உயர்நிலைப்பள்ளி அடுத்த ஆண்டுக்குள் மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

10:08 September 15

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதிப்பதற்காக, திமுக சார்பில் ஒரு தனி தீர்மானமும், 31 கவன ஈர்ப்பு தீர்மானங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

10:02 September 15

பதாகையுடன் வந்த எம்எல்ஏ தமிமுன் அன்சாரி

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பதாகையுடன் சட்டப்பேரவைக்கு வந்துள்ளார்.

10:01 September 15

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.

09:55 September 15

கூட்டத்தொடர் தொடங்கியதும், பல்வேறு அரசு சட்ட முன்வடிவுகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, இன்றைய தினமே அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்படவிருக்கிறது. 

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் பயில முன்னுரிமை வழங்கும் சட்ட முன்வடிவை, சட்டப்பேரவையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரி இரண்டாம் சட்ட முன்வடிவை அமைச்சர் கே.சி. வீரமணி தாக்கல் செய்கிறார்.

அதைத்தொடர்ந்து, கரோனா பரவல் காரணமாக சமுக இடைவெளி, முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்ட முன்வடிவையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் இன்னும் சிறிது நேரத்தில் தாக்கல் செய்கிறார்.

வரிவிதிப்பு சட்டங்களில் சில தளர்வுகளை செயல்படுத்துவது தொடர்பான சட்ட முன்வடிவும் பேரவையில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

07:26 September 15

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் காலை 10 மணியளவில் தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதும் கேள்வி நேரம் மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பிரச்சனைகளையும், கோரிக்கையும் முன்வைப்பர். அக்கேள்விகளுக்கு அமைச்சர்கள், முதலமைச்சர் பதிலளிப்பர்.

Last Updated : Sep 16, 2020, 8:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.