ETV Bharat / city

வேட்பு மனு தாக்கல் நிறைவு..  தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் இன்று பரிசீலனை

author img

By

Published : Mar 20, 2021, 8:30 AM IST

சென்னை: . தமிழ்நாடு முழுவதிலும் 234 தொகுதிகளில் 6 ஆயிரத்து 637 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (மார்ச் 20) நடைபெற உள்ளது.

reviewing of nomination filing
வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 13 (சனிக்கிழமை), 14 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாள்கள் தவிர்த்து, வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று நேற்று மதியம் 3 மணியுடன் (மார்ச் 19) நிறைவு பெற்றது.

இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்து 637 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 23 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் அளிக்கும் வேட்புமனு விண்ணப்பம், சொத்துப்பட்டியல் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

reviewing of nomination filing
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனுக்கள் எண்ணிக்கை

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவர்களால் நிராகரிக்கப்படும். இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் தேர்தலில் போட்டியிட தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர் வரிசைப்படுத்தப்படும். இதன் பின்னர் வேட்புமனு ஏற்கப்படும்.

கடைசிநேரத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள், தங்களது மனுவை வரும் 22ஆம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 3 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம். இந்த கால அவகாசம் முடிவடைந்தவுடன், அன்றைய நாள் மாலையிலேயே அந்தந்த தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பெயர் பட்டியல் தயார் செய்யப்படும்.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் அன்றைய நாளிலேயே நடைபெறும். அதன் பின்னர் மின்னணு வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி முழுவீச்சில் தொடங்கி நடைபெறும்.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக, டிடிவி தினகரனின் அமமுக, கமல ஹாசனின் மக்கள் நீதி மையம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய ஐந்து பிரதான காட்சிகள் களமிறங்கியுள்ளன. இதனால் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்துமுனை போட்டி நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு - சென்னை தேர்தல் அலுவலர் பிரகாஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.