ETV Bharat / city

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலை... #LiveUpdates - tn-assembly-live-updates

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பேரவை
author img

By

Published : Jul 1, 2019, 10:30 AM IST

Updated : Jul 1, 2019, 11:57 AM IST

  • தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • பேரவைத் தலைவர் தனபால் திருக்குறள் வாசித்து இன்றைய அலுவல்களைத் தொடங்கி வைத்தார்.
  • முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குமாரதாஸ் மறைவுக்கு அவை உறுப்பினர்கள் அஞ்சலி
  • கேள்வி நேரம் தொடங்கியது
  • '9 நவரத்தினங்களை அமரவைத்து அழகு பார்க்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி' - இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புதிய அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

  • கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி லாடாவரம் ஊராட்சியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்ட இந்த ஆண்டே நிதி ஓதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
  • 'சாமானியன் ஆட்சி நாடாளுமன்றத் தேர்தலுடன் முடிந்துவிடும் என்றார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு பின்னால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் இந்த ஆட்சி இருக்கும் என கூறினார். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பரப்புரை செய்து வெற்றி பெற வைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு எனது சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' - அமைச்சர் தங்கமணி பேச்சு

  • கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் உயர் கோபுர மின் கம்பிகளை மாற்றி புதைவட மின்கம்பிகளை பொறுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்’ - அமைச்சர் தங்கமணி.

  • தற்போது நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நகர் பகுதிகளைக் காட்டிலும் கிராமப்பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு நிலம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும், அதற்கான இடங்களைப் பெற்றுத்தர சட்டப்பேரவை உறுப்பினர் முன்வர வேண்டும். நிலம் கிடைக்கும் பட்சட்சத்தில் விரைந்து துணை மின் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

  • திமுக உறுப்பினர் சேகர்பாபு, பாரிமுனையில் துணை மின் நிலையம் அமைக்க மூன்று ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவதாகவும், அதை இந்த கூட்டத்தொடரிலாவது அறிவிக்கப்படுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, சென்னையில் துணை மின் நிலையம் அமைக்க இடம் கிடைத்தாலும், அது கொடுக்க முடியாத விலையாக உள்ளது. பாரிமுனையில் மின் நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் காவல்துறைக்கு சொந்தமான நிலமாக உள்ளதால் அங்கு துணை மின் நிலையம் அமைப்பதில் சட்ட சிக்கல் உள்ளதாகவும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவதற்குள் இடம் கண்டறியப்பட்டு துணை மின் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்” என தெரிவித்தார்.

  • திமுக எம்எல்ஏ கே.என்.நேரு - ‘திருச்சி நகருக்கு செல்லும் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற அரசு முன்வரவேண்டும். போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நிதி ஒதுக்கப்பட்டும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. விரைவில் பணி தொடங்க நடவடிக்கை வேண்டும்’

    நேருவின் கேள்விக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பதில் - ‘முதலமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்’

  • தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு 7 அரசு சட்டக் கல்லூரிகள் இருந்தது. ஆனால் தற்போது ஒரே நேரத்தில் மூன்று சட்டக் கல்லூரிகளை தற்போதைய முதலமைச்சர் பின்தங்கிய மாவட்டங்களில் தொடங்கியுள்ளார். இந்த மூன்று சட்டக்கல்லூரிகளுக்கும் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று நிறைவடையும் நிலையில் உள்ளன. இதேபோல் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த அரசு சட்டக்கல்லூரி பல்வேறு பிரச்னைகள் காரணமாகவும், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் புது பாக்கத்திலும், திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூரிலும் பிரித்து செயல்பட்டு வருகின்றது. மேலும், சென்னையில் சீர்மிகு சட்டக்கல்லூரியும் திருச்சியில் தேசிய சட்டக்கல்லூரியும் இயங்கி வருகின்றது. சட்டக் கல்லூரிகளில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட இடங்கள் உள்ளது மேலும் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது எனவே எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அரசு பரிசீலனை செய்யும் - அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல்

  • ரகுபதி எம்எல்ஏ - நியாயவிலை கடைகள் மூலமாக கால்நடைகளுக்கு தீவனம் வழங்க அரசு முன்வருமா?

    உணவுத்துறை அமைச்சர் காமராஜ் - பொதுவிநியோகத் திட்டம் மக்களுக்கான திட்டம். எனவே கால்நடைகளுக்கு தீவனம் வழங்க சாத்தியமில்லை.

    முன்னதாக கேள்வி நேரத்தின்போது பேசிய ரகுபதி எம்எல்ஏ, தமிழகத்தில் வெற்றிடம் என்பதாக பலரும் கூறினர். அது இல்லை என்பதை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலமாக நிரூபித்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இதன் மூலம் மக்கள் சக்திக்கு சொந்தக்காரராகவும், மக்கள் தலைவராகவும் ஸ்டாலின் திகழ்வதாக ரகுபதி புகழாரம்.

  • ‘சுகாதாரத்துறை குறித்து நிதி ஆயோக் தவாறன தகவல் கொடுத்துள்ளது. அதை திருத்துவதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். உலகத் தரமிக்க புற்றுநோய் சிகிச்சை மையம் சேலத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ளது. அது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார்’ - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Intro:Body:

TN assembly

Conclusion:
Last Updated : Jul 1, 2019, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.