ETV Bharat / city

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு

assembly
author img

By

Published : Jul 16, 2019, 10:18 AM IST

Updated : Jul 17, 2019, 10:34 AM IST

10:10 July 16

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை நடைபெற்ற சுகாதாரம், குடும்ப நலத் துறை உள்ளிட்ட துறைகளின் மீதான மானியக் கோரிக்கை- விவாதங்கள் பற்றிய தொகுப்பு.

10:00

  • தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தை பேரவைத் தலைவர் தனபால் திருக்குறள் வாசித்து தொடங்கிவைத்தார்.

கேள்வி நேரம் தொடக்கம்

10:30

  • நல்லமுடி பூஞ்சோலை தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ளதால், அங்குள்ள இயற்கை காட்சிகளை ரசிக்கும் வகையில் தொலைநோக்கி அமைக்கவும், அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், குரங்கு அருவியில் உடைமாற்றும் வசதி ஏற்படுத்தவும் நிதி ஆதாரத்தை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் - வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில்

10:43

  • திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பெரியகருப்பன்: சிவகங்கை - ராமநாதபுரம் - புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க திமுக ஆட்சியில் 620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. அதை சரியாக பராமரிக்காததால் தற்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்குப் போதுமான பணியாளர்களை நியமித்து பராமரிப்பு செய்து மீண்டும் அந்த உன்னதத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • அமைச்சர் வேலுமணி: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உரிய முறையில் பராமரிப்புப் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு, அனைத்து கிராமத்துக்கும் குடிநீர் சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

10:46

  • மயானங்களுக்குச் செல்லும் பாதைகளுக்கு பாலங்கள், சாலைகள் அமைக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும் -  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

10:50

  • கெங்கவல்லியில் புதிய பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தகவல்

கேள்வி நேரம் நிறைவு

11:30

மத்திய அரசு மீது கிரிமினல் வழக்கு பாயும் - சி.வி.சண்முகம் எச்சரிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேச்சும், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலும்!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்: 

  • நேற்று நாடாளுமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பதில் அளித்து பேசிய பெட்ரோலியத் அமைச்சர் தர்மேந்திர பிரதான், 7 ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 23 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பேசியுள்ளார். 
  • ஹைட்ரோ கார்பன் திட்டதுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்று சட்டத்துறை மற்றும் தொழில் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளனர். ஆனால், மத்திய அமைச்சர் நேற்று இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் வரும் என்று தெரிகிறது. இதனை உடனடியாக தடுக்க கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்:

  • ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவை. மாநில அரசு அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மத்திய அரசு மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது.

11:45

விதி எண் 110ன் கீழ் புதிய அறிவிப்புகள்

  • கைத்தறி நெசவாளர் - 10% உயர்வு - கைத்தரி நெசவாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கான அகவிலைப்படி 10% உயர்த்தப்படும்.
  • சேலை ஒன்றுக்கு 43.10 ரூபாய் கூலி - சேலை ஒன்றுக்கு 43.10 ரூபாயும், வேட்டி ஒன்றுக்கு 24 ரூபாயும் கூலியாக வழங்கப்படும்.
  • கூட்டுறவு சங்கங்களுக்கான வட்டி மானியம் - கூட்டுறவு சங்கங்களுக்கான வட்டி மானியம் 6 சதவீதமாக உயர்த்தப்படும்.

மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடக்கம்

12:05

சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சி

  • மறைந்த சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியின் உருவப்படம் சட்டப்பேரவையில் வருகின்ற 19ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது. ராமசாமி படையாட்சி காமராஜர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.  
  • சபாநாயகர் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருக்கிறார். 

12:20

  • கல்வி தொலைக்காட்சியில் சுகாதாரம் குறித்த நிகழ்ச்சிகள் மூலமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

12:33

  • 10 மாவட்ட மருத்துவமனை, 2 மருத்துவக் கல்லூரிகளில் 40 இடங்களுக்கு Diplomate of National Board (DNB) மருத்துவப் பட்டய படிப்புகள் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்திய அளவில் அரசு மருத்துவமனைகளில் அவசரகால மருத்துவ பட்டய படிப்பு அங்கீகாரம் பெற்ற இரண்டு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் 5  அவசரகால மருத்துவப் பட்டய படிப்பு இடங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1:00 

  • ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு அம்மாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் - திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா கிண்டல்

1:40 

  • சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் போல் அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும், உடலுறுப்பு தானம் வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தது.

2:20

  • திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன்: திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்றும் சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்ய முடியுமா? இதை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செய்ய முடியுமா?
  • சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனியாக கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 17 திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மற்றொரு கிளினிக் மதுரையில் அமைய உள்ளது. திருநங்கைகளுக்கு இந்த சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்யப்படும்.

இன்று சுகாதாரம், குடும்ப நலத்துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதையடுத்து, தலைமைச் செயலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றவருகிறது.

Intro:Body:

tn assembly live updates 

Conclusion:
Last Updated : Jul 17, 2019, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.