ETV Bharat / city

உடனுக்குடன்: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகள் - TN Legislative assembly Live

TN
TN
author img

By

Published : Jan 7, 2020, 11:57 AM IST

Updated : Jan 7, 2020, 9:09 PM IST

20:35 January 07

சட்டப் பேரவை இன்று நிறைவு பெற்றது..

துரை முருகன்: சட்டப்பேரவையில் குடிக்க நல்ல காபி கூட கிடைப்பதில்லை" என்றார்.

சபாநாயகர் தனபால்: "காபி உடன் ஸ்நாக்ஸ் கொடுக்க சொல்லி உள்ளோம்* என்றார்.

 8:06 PM 
 
ஓ.பன்னீர் செல்வம்:" ஜி.எஸ்.டி. வரியில் மத்திய அரசு கொடுக்கவேண்டிய 4073 கோடி ரூபாயை பெற தொடர்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது."
 
8.09PM

அமைச்சர் ஜெயக்குமார்: மாநிலங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்தால் மட்டுமே ஜிஎஸ்டிக்கு ஆதரவு தெரிவிப்போம் என ஜெயலலிதா கூறினார். இதனால்தான் அனைத்து மாநிலங்களும் தற்போது இழப்பீடு பெறுகின்றன. மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையில் ரூ.3,894 கோடி தான் நிலுவையில் உள்ளது

பேரவை நிறைவு பெற்றது. மீண்டும் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும்

20:22 January 07

இலங்கை அகதிகளுக்கு இரட்டைகுடியுரிமை வழங்க மத்தியரசிடம் வலியுறுத்துவோம்- முதலமைச்சர்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சட்டப்பேரவையில் விவதாம் கிளம்பிய போது,

துரை முருகன் : "மாற்றாந்தாய் பிள்ளை போல் இலங்கை தமிழர்களையும்  இஸ்லாமியாரகளையு் கை விட்டு விட்டீர்கள்" என்றார்

எம்.எல்.ஏ. செம்மலை: " குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முதலமைச்சர் முன்னின்று எதிர்ப்பார்" என்றார். 

துரை முருகன்: "இதையேதான் நீட் தேர்விற்கும் சொன்னீர்கள்"  என்றார்.

அமைச்சர் உதயக்குமார்: "குடியரிமை திருத்தச் சட்டத்தால் எந்தவித பிரச்னையும் வராது என பிரதமர், உள்துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளனர். காங்கிரஸ் தேவையில்லாமல் பிரச்னை செய்து வருகிறது இச்சட்டத்தால் யாருக்கும் குடியுரிமை பறிக்கப்படாது"  என்றார்

முதலமைச்சர்: " இலங்கை அகதிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க தொடர்ந்து மத்திய அரசியடம் வலியுறுத்துவோம்" என்றார்.

20:13 January 07

பாதை மாறியதால் பிரபாகரன் மீதான அனுதாபம் குறைந்தது- செம்மலை எம்.எல்.ஏ

"பிரபாகரனை முதலில் ஆதரித்தது எம் ஜி ஆர், ஜெயலலிதா. ஆனால் அவர் வழி மாறியதால் தான் அவரின் மீதான அனுதாபம் குறைந்தது"  என்று எம்.எல்.ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.

19:37 January 07

' கோலம் போட்டவர்களைக் கைது செய்ததில் அரசுக்கு உள்நோக்கம் இல்லை '

7.03 PM 

' கோலம் போட்டவர்களைக் கைது செய்ததில் அரசுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. கோலம் போட்டவர்கள் அடுத்தவர் வீட்டு வாசலில் கோலமிட்டதாக அந்த வீட்டு உரிமையாளர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் தான் கோலம் போட்டவர்களைக் கைது செய்துள்ளோம்' என  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

19:33 January 07

வடமாநிலங்களில் தொடர் மழையினால் வெங்காய விலை உயர்வு: முதலமைச்சர் விளக்கம்

05.23 PM

' வெங்காயத்தின் விலை உயர்வு நிரந்தரம் இல்லை. வடமாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த மழையால் வெங்காய விலை உயர்ந்தது. தற்போது வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது' என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 

13:24 January 07

ஒருமையில் பேசிய திமுக எம்.எல்.ஏ. அன்பழகனை சஸ்பெண்ட் செய்து சட்டப்பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

13:13 January 07

திமுக எம்.எல்.ஏ. அன்பழகன்: என் தலைவர் மன்னிப்பு கேட்டதையும், நான் பேசியதையும் அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.

அமைச்சர் உதயகுமார்: தேசிய மக்கள் தொகை பதிவேடு 2003ஆம் ஆண்டில் கொண்டு வரபட்டது. அப்போது திமுக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்திருந்தது. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எல்லா விவகாரங்களிலும் திமுக, அதிமுக அரசு மீது பழி போடுகிறது.

13:12 January 07

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: 1.5 விழுக்காடு வாக்கு மட்டுமே திமுக அதிகமாக பெற்றுள்ளது

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: திமுக கொறடா மகாத்மா காந்தி போல உள்ளார்.

13:04 January 07

அவையில் அமளி தொடரவே, அன்பழகன் வெளியேற வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர், மறப்போம், மன்னிப்போம் என்றார். அவை தொடர்ந்து நடக்க ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

13:03 January 07

சபையில் திமுக உறுப்பினர் அன்பழகன், அமைச்சர் வேலுமணியை ஒருமையில் பேசி உள்ளார். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கோரினார்.

12:34 January 07

மாற்றுத் தலைவர்கள் பட்டியல் வெளியீடு!

சபாநாயகர் தனபால் பேரவையில் இல்லாத பட்சத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சபையை வழி நடத்துவார். அவரும் இல்லாத பட்சத்தில், எவரேனும் ஒருவர் சபையை வழி நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:28 January 07

ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் முன்மொழிந்தார்.

12:10 January 07

திருவாடனை எம்.எல்.ஏ. கருணாஸ் வெளிநடப்பு செய்துள்ளார்.

12:06 January 07

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், "இந்தியா முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டம், துப்பாக்கிச் சூடு என நாடு முழுவதும் தீ பற்றி எரிந்து வருகிறது. இதை முக்கிய பிரச்னையாகக் கருதி சட்டப்பேரவையில் எழுப்பினோம். ஆனால் சபாநாயகர் பேச அனுமதி அளிக்கவில்லை. அதிமுக பாஜகவின் அடிமை அரசாக செயல்படுகிறது. இதனை கண்டிக்கும் விதத்தில் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்"  என்றார். 

11:39 January 07

நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால்‌ புரோகித்‌ உரையுடன் தொடங்கியது.

ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலிருந்து திமுக, காங்கிரஸ், அமமுக, முஸ்லீம் லீக், மனித நேய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. இதையடுத்து இரண்டாவது நாளான இன்று, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சபாநாயகர் தனபால்: நீங்கள் கொடுத்த மனு ஆய்வில் உள்ளது. 

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: ஆய்வு செய்து தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்ற பொன்னான வார்த்தையை சொல்லிவிட்டால் நாங்கள் திருப்தியடைவோம்.

சிறுபான்மையின மக்கள் என்றாலே அதிமுகவுக்கு கசக்கிறது என திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின்: நாடு முழுவதும் சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது ஏன்? என கேள்வி எழுப்பினார். 

வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்: குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. அதே நேரத்தில் அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளது. எங்கள் ஆட்சியில் எந்த ஒரு சிறுபான்மையினருக்கு சிறு பாதிப்பு கூட ஏற்பட்டதில்லை. மாமன், மச்சானாக சிறுபான்மையின மக்கள் பழகி வருகிறார்கள். எதிர்கட்சி திட்டமிட்டு இட்டுக்கட்டி பேசி வருகிறது.

மு.க. ஸ்டாலின்: பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்ல.

அமைச்சர் உதயகுமார்: சிறுபான்மையின மக்களுக்கு சத்தியம் இட்டு சொல்கிறேன். அம்மா அரசு தான் சிறுபான்மையின மக்கள் தான் காத்து வருகிறது

மு.க.ஸ்டாலின்: நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, ஆங்காங்கே கலவரம் துப்பாக்கிச்சூடு என நடைபெறும்போது இதனை பேரவையில் விவாதிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

Intro:Body:

TN ASSEMBLY

Conclusion:
Last Updated : Jan 7, 2020, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.