ETV Bharat / city

கண்ணகி சிலை விவகாரம் - திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் - kannagi statue removed

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மெரினா கடற்கரையில் இருந்து கண்ணகி சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்துகொண்டனர்.

கண்ணகி சிலை விவகாரம்
கண்ணகி சிலை விவகாரம்
author img

By

Published : Mar 22, 2022, 4:22 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்ட பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன், அதிமுக ஆட்சியில் மெரினா கடற்கரையிலிருந்த கண்ணகி சிலை காரணமில்லாமல் அகற்றப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செங்கோட்டையன், ”கண்ணகி சிலையை உடைத்து தள்ளிய அதிமுக என உறுப்பினர் பேசியதாகவும் அதனை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, ”சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் எந்த ஒரு தனிப்பட்ட இயக்கத்தையோ , தனிப்பட்ட நபரையோ குறிப்பிட்டு பேசாமல் பொதுவான கருத்தையே முன்வைத்தார், எனவே அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

எனினும் அதிமுக ஆட்சியில் சிலை அகற்றப்பட்டதா இல்லையா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன் கண்ணகி சிலை மாற்றப்பட்ட நேரத்தில் லாரி இடித்து விழுந்து விட்டதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியது. எனினும் அது அகற்றப்பட்டது உண்மை என விவாதத்தை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: 'ஒரே ஆண்டிற்குள் நிதிப்பற்றாக்குறை தொகையைக் குறைத்துள்ளோம்' - நிதியமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.