சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையால் தமிழ்நாட்டில் கரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. சந்தைக்குத் தொடர்புடைய அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும், அவர்களை தனிமைப்படுத்த வேண்டும், திருமழிசையில் அமைக்கப்படும் தற்காலிகச் சந்தையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்பட வேண்டும் என்று, கெருகம்பாக்கம் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை காணொலிக் காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, கோயம்பேடு வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை விவரங்கள், திருமழிசை தற்காலிகச் சந்தையில் செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள், வசதிகள் குறித்த தற்போதைய நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: திருமழிசையில் சந்தை அமைக்கும் பணி குறித்து முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்