ETV Bharat / city

ரயில்களில் காகிதங்கள் இல்லாமல் டிக்கெட் பரிசோதனை! - இந்திய ரயில்வே

கைகள் படாமல் ரயில் டிக்கெட் பரிசோதனைகளுக்கு டிஜிட்டல் டிக்கெட் சரிபார்ப்பு இயந்திரத்தை தென்னக ரயில்வே வழங்கியுள்ளது.

இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே
author img

By

Published : Jun 4, 2021, 10:02 PM IST

சென்னை: இந்திய ரயில்வே சார்பாக டிக்கெட் பரிசோதனைகளுக்கு கைகளில் டிக்கெட்களை தொடாமலே பரிசோதிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பயணச்சீட்டுகளை பரிசோதனை செய்பவர்கள், காகிதங்களை வைத்து பயணச்சீட்டுகளை சரிபார்க்கும் முறைக்கு மாற்றாக, டிஜிட்டல் முறையில் பார்கோடு ஸ்கேன் செய்து தொடாமலே, காகிதம் இல்லாமலே பயணச்சீட்டுகளை சரிபார்க்கும் நடைமுறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக ராஜ்தானி சதாப்தி போன்ற நவீன ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதனைகளுக்கு 550 பரிசோதனை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 10,000 டிஜிட்டல் பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
தென்னக ரயில்வே கோயம்புத்தூர் சதாப்தி ரயில், சென்னை சென்ட்ரல் மைசூர் சதாப்தி ரயில் டிக்கெட் பரிசோதனைகளுக்கு இந்த டிஜிட்டல் டிக்கெட் சரிபார்ப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்யப்பட்டு அவர்களின் விவரத்தை காகிதத்தில் ஒட்டும் நடைமுறை 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கைவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு முதல் 350 பயணிகள் ரயில், மின்சார விரைவு ரயில்கள் ஆக மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் எளிமையாக பயணம் செய்வதோடு கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறையில் இருந்தே தண்ணிகாட்டிய மெகுல் சோக்ஸி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.