சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் இன்று மாலை நடக்கிறது. இதையடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழ்நாடு வரவுள்ளார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐ.டி.சி. சோழா நட்சத்திர விடுதி முன்பாக திபெத்தியர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் பார்வையாளர்கள் போல் உள்ளே நுழைந்துள்ளனர். இந்த நிலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை காவலர்கள் அவர்களை கைது செய்தனர். அவர்கள் ஐந்து பேரும் திபெத்திய மாணவர்கள்.
சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட திட்டமிட்டு இருந்ததாக திபெத்தியர்கள் எட்டு பேர் சென்னையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவலர்கள் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.