ETV Bharat / city

மெரினாவில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற மூன்று பெண்கள் கைது! - Marina

சென்னையில் உள்ள மெரினா கடற்கரைப் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் விற்ற மூன்று பெண்களை காவல் துறை கைது செய்தது. மேலும் 40 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மெரினாவில் சட்ட விரோதமாக சாராயம் விற்ற மூன்று பெண்கள் கைது

author img

By

Published : May 17, 2022, 10:31 PM IST

சென்னை: சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் மெரினா காவல் நிலைய காவல் துறையினருக்கு மெரினா கடற்கரையில் சிலர் சாராயம் விற்பதாக ரகசியத்தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது மெரினா கடற்கரையிலுள்ள கண்ணகி சிலை பின்புறம் மூன்று பெண்கள் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் மூன்று பெண்களும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கீதுஸ் கோஸ்லயா(30),சுனந்தா(65), சில்பா(29) என தெரியவந்தது.இதையடுத்து அவர்களிடமிருந்த 40 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் மூன்று பெண்களும் மெரினா பகுதியில் பிளாட் பார்மில் வசித்து வருவதும், ஆந்திராவிலிருந்து சாராயத்தை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பெண்களும் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: மசாஜ் சென்டர் சோதனை- நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சென்னை காவல் ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.