சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (அக் 18) நடந்த இரண்டாவது நாள் கூட்டத்தொடரில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான மொத்தம் ரூ.3,795.72 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்யும் முதல் துணை மதிப்பீடுகளை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
மேற்படி சட்டப்பேரவையில் தாக்கல் செய்த விபரங்கள் பின்வருவன:
* 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 'புதுப் பணிகள்' மற்றும் புது துணைப்பணிகள்' குறித்து, 2 ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வதும் இத்துணை மானியக்கோரிக்கையின் நோக்கமாகும்.
* போக்குவரத்துத் துறையில் சொத்துகளை உருவாக்குவதற்காக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு (STUs) பங்கு மூலதன உதவியாக 500 கோடி ரூபாயை அரசு அனுமதிக்க உள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் மானியக்கோரிக்கை எண் 48 - போக்குவரத்துத் துறை" என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
* சென்னை பெருநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வெள்ளத் தணிப்பு பணிகளுக்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் ஆகியவற்றிற்கு மாநிலப் பேரிடர் தணிப்பு நிதியின் (SDMF) கீழ், 373.50 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் மானியக்கோரிக்கை எண் 51 - இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
* சென்னை மற்றும் மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிக பாதிப்புக்குள்ளான 5 செங்கல்பட்டு பகுதிகளில் தணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்குக் கூடுதலாக 134.22 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. துணை ரூபாயை அரசு மதிப்பீடுகளில் "மானியக்கோரிக்கை எண் 40 நீர்வளத் துறை" என்பதன் கீழ், 1,000 ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. மீதத் தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பிலிருந்து மறுநிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.
* கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 7 பாசனக் கட்டமைப்புகளை சீரமைக்க 104.13 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. மற்றும் கரூர் துணை மதிப்பீடுகளில் 29.76 கோடி ரூபாய் 6 சேர்க்கப்பட்டுள்ளது. மீதத் தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பிலிருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும். துணை மதிப்பீடுகளில் "மானியக்கோரிக்கை எண் 40 - நீர்வளத் துறை" என்பதன் கீழ், மொத்தமாக 336.38 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.
* சென்னை வெளிவட்டச் சாலைத் திட்டம் பகுதி - I திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவதற்குக் கூடுதலாக 227.16 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் துணை மதிப்பீடுகளில் "மானியக்கோரிக்கை எண் 21 - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை" என்பதன் கீழ், மொத்தமாக 369.74 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.
* 2022-23 ஆம் கல்வியாண்டில் 28 சிறப்புப் பள்ளிகளை நிறுவுவதற்கு 169.42 கோடி ரூபாய்க்கு இந்த அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. துணை மதிப்பீடுகளில் "மானியக்கோரிக்கை எண் 43 - பள்ளிக்கல்வித்துறை"யின் கீழ், 100.82 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. மீதத் தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பிலிருந்து மூலம் மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.
* கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலை நிலுவைத் தொகையை வழங்குவதற்காக, கூட்டுறவு மற்றும் ஆலைகளுக்கு பொதுத்துறை சர்க்கரை வழிவகை 252.29 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் "மானியக்கோரிக்கை முன்பணமாக கோரிக்கை எண் 5 - வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை" என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
* திருவள்ளூர் மாவட்டம் , திருமழிசை அருகிலுள்ள குத்தம்பாக்கம் கிராமத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையத்தைக் கட்டுவதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியிலிருந்து 168 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் "மானியக்கோரிக்கை எண் 26 - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
* அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் முன்னோடித் திட்டமான, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு 33.56 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் "மானியக்கோரிக்கை எண் 45 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
* உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு 97.05 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. துணை மதிப்பீடுகளில் "மானியக்கோரிக்கை எண் 19 - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை" என்பதன் கீழ், 1,000 ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. மீதத் தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பிலிருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.
இதையும் படிங்க: இந்தித் திணிப்புக்கு எதிராக தனித் தீர்மானம் - பாஜக வெளிநடப்பு