சென்னை: துபாயிலிருந்து 400 கிராம் தங்கத்தக் கடத்தி வந்த குருவியே (கடத்தல்காரர்) அதனைக் கடத்தத் திட்டமிட்ட நிலையில், போலீசார் ஒருவரின் உதவியுடன் குருவியிடமிருந்து குருவியின் சகோதரகளே கடத்திய சம்பவம் அரும்பாக்கம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரூ.10 லட்சத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து மூவரை இன்று (செப்.12) கைது செய்துள்ளனர்.
மைக்ரோ ஓவனில் தங்கம் கடத்தல்: துபாயிலிருந்து கடந்த 7ஆம் தேதி, சென்னைக்கு திருத்தணியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் விமானத்தில் 400 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தார். துபாயைச் சேர்ந்த ஹஸன் பாஷா என்பரிடமிருந்து இதை அவர் பெற்று விமான நிலையத்தில் இருந்த பல கெடு பிடிகளைத் தாண்டி அவர் மைக்ரோ ஓவனில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார்.
கடத்தல் தங்கத்தை கடத்த எண்ணிய குருவி: பின்னர் சென்னை வந்ததும் தனது உறவினர்களான ஷாம், மைக்கேல் ராஜ் மற்றும் அவர்களது நண்பர்களுடன் ஒன்றாக செல்லும் வழியில் ஆனந்தராஜூக்கு, நாமும் இன்னமும் எத்தனை நாட்கள் தான் இப்படி உயிரைப் பணயம் வைத்து குருவியாக வேலை செய்வது என்று எண்ணியுள்ளார். தொடர்ந்து அவர், தனது தம்பிகளுடன் கடத்தி வந்த 400 கிராம் தங்கத்தை தானே கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அவரும் அவரது தம்பிகள் நால்வரும் இணைந்து விமானநிலையத்திலிருந்து அடையாருக்கு சென்று பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கி, கையோடு கொண்டு சென்ற மைக்ரோ ஓவனைத் திறக்க முயன்றபோது அதில் தங்கம் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் வீடு திரும்பினர்.
காரைக்காலில் காத்திருந்த கும்பல் கைவரிசை: இதனிடையே தங்கம் எப்போது கைக்கு வரும் என காரைக்காலில் காத்திருந்த கும்பல் ஒன்று, தங்கம் இன்னும் வரவில்லை என துபாயிலிருந்த ஹஸன் பாஷாவிற்கு தகவல் அளிக்கவே, ஆனந்தராஜின் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை ஹஸன் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை ஆனந்தராஜ் வீட்டிற்கு காலை 6 மணி அளவில் காரைக்காலை சேர்ந்த இதயத்துல்லா, பாலகன், ஆற்காட்டை சேர்ந்த திமுக நகர துணை செயலாளர் ரவிக்குமார், தினேஷ், நவீன் குமார் ஆகியோர் பிஎம்டபிள்யூ காரில் சென்று ஆனந்தராஜ் மற்றும் அவருடைய தம்பிகள் உட்பட ஐந்து பேரை காரில் கடத்தி சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.
தங்கம் எங்கே போனது? இதனைத் தொடர்ந்து, மறுநாள் காலை ஆனந்தராஜின் வீட்டிற்கு காலை 6 மணியளவில் பிம்டபிள்யூ காரில் சென்ற காரைக்காலைச் சேர்ந்த இதயத்துல்லா, பாலகன், ஆற்காடைச் சேர்ந்த திமுக நகர துணை செயலாளர் ரவிக்குமார், தினேஷ், நவீன் குமார் ஆகியோர் ஆனந்தராஜூவையும் அவரது சகோதரர்கள் ஐவரையும் காரில் கடத்தினர். கடத்தியதோடு, அரும்பாக்கத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்து அவர்களிடன் 400 கிராம் தங்கம் எங்கே? எனக் கேட்டு அடித்து துன்புறுத்தினர். தான் மைக்ரோ ஓவனைத் திறந்து பார்த்தபோது, அதில் தங்கம் காணாமல்போனதை அவர்களிடம் தெரிவித்தும் அவர்கள் விட்டபாடில்லை. தங்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு எங்களிடமா ஆட்டம் காட்டுகிறாய் எனக் கூறி மீண்டும் தாக்கியுள்ளனர்.
அரும்பாக்கம் போலீசாரின் விசாரணை: ஏதோ தவறு நடப்பதாக சுதாரித்த ஹோட்டலில் தங்கியிருந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அரும்பாக்கம் போலீசார் உடனடியாக அங்கிருந்தவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். ஆனந்தராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், இதயத்துல்லா, பாலகன் ரவிக்குமார், தினேஷ் உட்பட ஐந்து பேரையும் அரும்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தங்கம் என்ன ஆனது? என்பது குறித்து ஆனந்தராஜிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் தான் கொண்டு வந்த மைக்ரோ ஓவனில் எந்த தங்கமும் இல்லை எனத் தெரிவித்தார். தொடர்ந்து உடைந்த மைக்ரோ ஓவனின் துண்டுகள்.. எங்கே? எனக் கேட்டபோதுதான் அடுத்த அதிர்ச்சி குருவி கும்பலுக்கும், போலீசாருக்கும் காத்திருந்தது.
குருவியை ஏமாற்றிய குருவியின் சகோதரர்கள்: அது, முன்னதாக தனது சகோதரர் ஷாம் உட்பட அனைவரிடமும் தங்கம் குறித்து கூறியதைத் தொடர்ந்து அண்ணனுக்கு தெரியாமால் தன் நண்பர் வினோத் என்பவரின் யோசனைப்படி, யாருக்கும் சந்தேகம் எழாதவாறு சாதூர்யமாக கடத்தியுள்ளனர். அப்போது விமான நிலையத்திலிருந்து தங்கத்தை யாருக்கும் சந்தேகம் வராதபடி கொண்டு வருவதற்கு, தன்னுடைய நண்பர் விமல் என்பவர் சென்னை காவல்துறையில் வேலை பார்த்து வருவதாகவும், அவரை வைத்து நாம் எளிதாக காரியத்தை முடித்துவிடலாம் என வினோத், ஷாமுக்கு தகவல் கூறியிருக்கிறார்.
தங்கம் கடத்த உதவிய போலீசார்: அதன்படி மவுண்ட் காவல் நிலைய காவலர் விமல் கடந்த 7ஆம் தேதி ஆனந்தராஜை, விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்துள்ளார். அடையாறில் உள்ள பிரபலமான ஹோட்டலில் ஆனந்தராஜ் மற்றும் அவரது சகோதரர்களுடன் வினோத் மற்றும் விமல் ஆகியோரும் தங்கி உள்ளனர். ஹோட்டலில் வைத்து மைக்ரோ ஓவனை உடைக்க முயன்றபோது, அதை உடைக்க முடியாததால், விமல் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் கொண்டு சென்றால் எளிதாக உடைத்து தங்கத்தை கொண்டு வருகிறேன் என கூறியுள்ளார். அதனை நம்பிய ஆனந்தராஜ் மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள் அதற்கு சம்மதித்து உள்ளனர்.
உடைத்து திருடியது அம்பலம்: மைக்ரோ ஓவனை காவலர் விமல் மற்றும் வினோத் ஆகியோர் எடுத்துச் சென்று 3 மணி நேரம் கழித்து, வினோத், ஷாமுக்கு தொலைபேசியில் அழைத்து மைக்ரோ ஓவனில் எந்த தங்கமும் இல்லை. இதனால், காவலர் வினோத் மற்றும் அவருடைய ஆட்கள் பிரச்சினை செய்வதாகவும், ஒழுங்காக ரூ.50,000 கொடுத்து விட்டு சென்று விடுங்கள் என மிரட்டி உள்ளனர். இதை உண்மை என நம்பிய ஆனந்தராஜ் மற்றும் அவர் உடன் இருந்தவர்கள் பயத்தினால் உடனடியாக அறையை காலி செய்து விட்டு ஊருக்கு சென்றுள்ளனர்.
வினோத்தும் விமலும் ஏற்கனவே, ஆனந்தராஜ் மற்றும் அவருடைய சகோதரர்களுக்கு தெரியாமல், இவர்கள் வகுத்த ரகசிய திட்டம் நிறைவேற, 400 கிராம் தங்கத்தை சேர்ந்து சுமார் 20 லட்ச ரூபாய்க்கு விற்று பங்கு போட்டுள்ளனர். அரும்பாக்கம் போலீசாரின் விசாரணையில் இந்த விவகாரங்கள் தெரிய வந்தபோது, ஆனந்தராஜ் மற்றும் அவர் உடன் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடரும் விசாரணை: இவ்வாறு கொள்ளையடிக்க திட்டமிட்டவர்களிடமே, மூவர் கொள்ளையடித்த சம்பவம் கொள்ளையர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவலர் விமல் மற்றும் அவருடைய நண்பர் வினோத், 400 கிராம் தங்கத்தை விற்பனை செய்ய உடந்தையாக இருந்த ஸ்ரீதர் உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ரூ.10 லட்சம் பணம் மற்றும் தங்கத்தையும் அரும்பாக்கம் போலீசார் மீட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய கடற்படையில் ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் பி17ஏ ரக போர்க்கப்பல் அறிமுகம்