ETV Bharat / city

ஒரே பகுதியில் இருவேறு விபத்துகள்: மூவர் உயிரிழப்பு - Car crash near Avadi

சென்னை: ஆவடி அருகே ஒரே பகுதியில் இருவேறு விபத்துகள் ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஒரே பகுதியில் இருவேறு விபத்து: மூவர் உயிரிழப்பு
ஒரே பகுதியில் இருவேறு விபத்து: மூவர் உயிரிழப்பு
author img

By

Published : Jan 28, 2020, 9:33 AM IST

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் மின்சார வாரிய குடியிருப்பில் வசித்துவந்தவர் கமலக்கண்ணன். இவர், எண்ணூர் அனல்மின் நிலையத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில் கமலக்கண்ணன் தன்னுடன் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் சரண்ராஜ் என்பவருடன் காரில் வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் உள்ள வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார். கார் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் இருவரும் காருக்குள் சிக்கி உயிருக்குப் போராடி கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், காரில் சிக்கிய இருவரையும் மீட்டு வெளியே கொண்டுவந்தனர். இதில் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், காவல் துறையினர் கமலக்கண்ணனை மீட்டு போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணனும் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோன்று அதே பகுதியில் மற்றொரு விபத்தும் நடந்தது.

விபத்து நடைபெற்ற இடம்

சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வினோத். இவர் தனது நண்பர்கள் கார்த்திக், அபிஷேக் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் ஆவடி அருகே நியூ காலனியில் உள்ள தனது மாமா வீட்டிற்குச் செல்ல புறப்பட்டுள்ளார். இவர்கள் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரிப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அபிஷேக், கார்த்திக் ஆகிய இருவரையும் மீட்டு ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இருவரும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் விபத்திற்கு காரணமான கல்லூரிப் பேருந்து ஓட்டுநர் ஜெயபால் (65) என்பவரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே பகுதியில் ஏற்பட்ட இரு வேறு விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

90 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ரயில்வே பட்ஜெட்!

Intro:சென்னை ஆவடி அருகே அரசு ஊழியர் உட்பட 3 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.Body:சென்னை ஆவடி அருகே அரசு ஊழியர் உட்பட 3 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் அருகே பட்டமந்திரி, வல்லூர் மின்சார வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் கமலக்கண்ணன். இவர், எண்ணூர் அனல்மின் நிலையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று மதியம் கமலக்கண்ணன் தன்னுடன் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் சரண்ராஜ் என்பவருடன் காரில் வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு புறப்பட்டார். இவர்கள் வந்த கார் வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி வெளி வட்டச்சாலை, ஆவடி அருகே வெள்ளானூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, கமலக்கண்ணன் கட்டுப்பாட்டை இழந்து கார் தறிகெட்டு ஓடியது. பின்னர், கார் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது இதில் இருவரும் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அருகில் உள்ளவர்கள் காவல்துறை தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் காரில் சிக்கிய இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும்,
காவல்துறையினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த கமலக்கண்ணன் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து அதே வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில்
சென்னை, தண்டையார்பேட்டை சேர்ந்தவர் வினோத் இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவரது நண்பர்கள் கார்த்திக் அபிஷேக் இந்நிலையில் மதியம் வினோத், தனது நண்பர்களுடன் மொபட்டில் ஆவடி அருகே மோரை, நியூ காலனியில் உள்ள மாமா வீட்டிற்குப் புறப்பட்டார். இவர்கள் வண்டலூர்- மீஞ்சூர் 400அடி வெளிவட்ட சாலை, ஆவடி அருகே வெள்ளானூர், பாரதி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மொபட் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் வினோத் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். மேலும், அபிஷேக், கார்த்திக் இருவரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் இருவரையும் மீட்டு அருகில் ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவடி அருகே கொள்ளுமேடு, பெருமாள் கோவில் தெருவைச் சார்ந்த கல்லூரி பஸ் டிரைவர் ஜெயபால் (65) என்பவரை கைது செய்தனர். அடுத்து அதே பகுதியில் சாலை விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.