ETV Bharat / city

மூன்று நாள்கள் டாஸ்மாக் விடுமுறை: வழக்கமான விற்பனை! - Tasmac holiday

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதுபானக் கடைகள் நாளை முதல் (ஏப். 4) மூன்று நாள்களுக்கு மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தொண்டர்களும், மதுப் பிரியர்களும் இன்று (ஏப். 3) அதிகளவில் மதுப் பாட்டில்களை வாங்கிச் சென்றனர் என டாஸ்மாக் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில், வழக்கமான விற்பனைதான் நடைபெற்றது என தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று நாள்கள் டாஸ்மாக் விடுமுறை
மூன்று நாள்கள் டாஸ்மாக் விடுமுறை
author img

By

Published : Apr 3, 2021, 11:06 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் நாளை முதல் (ஏப். 4) வாக்குப்பதிவு நாளான செவ்வாய்க்கிழமை (ஏப். 6) வரை மூன்று நாள்கள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

எனவே, சென்னையில் உள்ள மதுபானக் கடைகளில் இன்றைய தினம் இருப்பு வைத்துக்கொள்ள கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கமான விற்பனைதான் நடைபெற்றது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுப் பாட்டில்களை ஏற்கனவே இருப்பு வைத்த மதுப்பிரியர்கள்

டாஸ்மாக் விடுமுறையைத் தெரிந்துகொண்ட மதுப்பிரியர்கள் மூன்று நாளைக்குத் தேவையான மதுப் பாட்டில்களை வாங்கி, ஏற்கெனவே இருப்பு வைத்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், பெரும்பாலானோர் கடந்த இரண்டு நாளாக பைகள் மூலம் பாட்டில்களை நிரப்பிக்கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இன்றைய தினம் அதிகமான கடைகளில் ஏற்கெனவே சரக்கு விற்றுத் தீர்ந்தது எனவும், பெரும்பாலான கடைகளில் சரக்கு இருப்பும் குறைவாகவே இருந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுதாரித்துக்கொண்ட அரசியல் கட்சித் தொண்டர்கள்

மேலும், தேர்தல் பரப்புரை நாளை மாலை 7 மணியுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சித் தொண்டர்களும் அதிகளவில் மதுப்பாட்டில்களை வாங்கிச் சென்றனர் என்கின்றனர், பணியாளர்கள்.

சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் ஊழியர் கூறியபோது, 'மதியம் 12 மணியிலிருந்து இரவு 8 மணிவரை விற்பனை மந்தமாகவே இருந்தது.

பிறகு வழக்கமான நுகர்வோர்கள் அதிகளவில் வந்தனர். எனினும், இரண்டு நாள்களுக்கு முன்பே பெரும்பாலானோர் மதுப் பாட்டில்களை வாங்கிக்கொண்டு, இருப்பு வைத்துக் கொண்டது போலத் தெரிகிறது' என்றார்.

இதையும் படிங்க: 'தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் 3 நாள்கள் மூடல்: 1,230 மதுபாட்டில்கள் பறிமுதல்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.