தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அரசின் குடிமராமத்து திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”மாநிலம் முழுவதும் உள்ள 14 ஆயிரம் ஏரிகள் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் படிப்படியாகத் தூர்வாரப்பட்டுவருகின்றன. 2016-17ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 513 ஏரிகள் தூர்வாரப்பட்டன.
2017-18ஆம் ஆண்டில் 331 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 523 ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 2019-20ஆம் ஆண்டில் 499 கோடி செலவில் ஆயிரத்து 829 ஏரிகளும், 2020-21ஆம் ஆண்டில் ஆயிரத்து 464 ஏரிகள், குளங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
மூன்று ஆண்டுகளில் குடிமராமத்துப் திட்டத்தின்கீழ் நான்காயிரத்து 865 ஏரிகள் 950 கோடி ரூபாய் செலவில் விவசாயிகள் ஒத்துழைப்போடு தூர்வாரப்பட்டுள்ளன“ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொழிற்பயிற்சி நிலையம் - மக்கள் தயார்; அரசு தயாரா?