ETV Bharat / city

செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

author img

By

Published : Dec 3, 2020, 10:38 AM IST

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளதால், கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று (டிச.03) நண்பகல் ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

'புரெவி' புயல் காரணமாக பெய்து வரும் மழையினால், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளும் நிரம்பி வருகின்றன. இதனால், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 3 ஆயிரத்து 158 கனஅடி நீர் உபரி நீரானது, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் முழுக் கொள்ளளவான 24 அடியில் 22 அடியை எட்டியுவுடன், ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது ஏரியில் 22.15 அடி முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளதனால், இன்று(டிச.03) நண்பகல் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதாகவும்; இதனால் கரையோரப்பகுதிகளான காவலூர், குன்றத்தூர், நத்தம் திருமுடிவாக்கம், திருநீர் மலைப் பகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மழை அதிகம் இருப்பதால், இன்னும் கூடுதலான நீர் திறக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், ஏரிக்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 21 அடிக்கு ஏறிய நீர்மட்டம்... செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணிக்கும் பொதுப்பணித் துறை...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.