சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மத்திய அரசின் விஞ்ஞான் மேளா என்ற திட்டத்தின்கீழ் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும்விதமாக கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடபெற்றது.
இந்தக் கண்காட்சியை செல்வி மருத்துவச் சேவை மையத்தின் மருத்துவர் ராஜ்குமார், காமராஜரின் உறவினர் வழி பேத்தி மயூரி ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.
இதில், இயற்கை விவசாயம், மாடித்தோட்டம், ராக்கெட், காற்றாலை மின்சாரம், போக்குவரத்து விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு வகையான படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:திஷா என்கவுண்டர் வழக்கு: போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு