ETV Bharat / city

மாநில உரிமை குறித்து திமுக பேசுவது விநோதமானது - திருமுருகன் காந்தி

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியை உறுதி செய்யாத திமுக அரசு, மாநில உரிமை குறித்து பேசுவது விநோதமானது என திருமுருகன் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி
author img

By

Published : May 23, 2022, 8:39 AM IST

சென்னை: 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை சென்னையில் ஒருங்கிணைத்தவர்கள் நேற்று (மே 22) கைது செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுப்படுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுவது வழக்கம்.

  • நினைவேந்தல் நடத்த முயன்றதற்காக நூற்றுக்கணக்கான தோழர்களுடன் கைதாகி உள்ளோம்.
    படுகொலையான தமிழர்களுக்கு
    நினைவேந்தும் உரிமையைக் கூட உறுதி செய்யாத திமுக அரசு மாநில உரிமை குறித்து பேசுவது விநோதமானது. pic.twitter.com/ICTIQpBgaz

    — Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி (@thiruja) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த 2017ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு, நீதிமன்றம் தலையிட்டு மெரினா நினைவேந்தல் நிகழ்விற்கு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையம் முன்பு நேற்று (மே 22) நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைக்கப்பட்டனர்.

  • திமுக அரசின் தடை தகர்க்க திரண்ட கருஞ்சட்டைபடை.

    ஆரிய-சிங்கள சதியை அம்பலமாக்க
    எழுச்சியோடு திரண்ட
    தோழர்கள்.

    சிறைக்கு அஞ்சா
    பெரியாரின் வழியில்
    சமரசமில்லா இயக்க அரசியலை படைத்திடுவோம்.

    அடக்குமுறைக்கு அஞ்சாது உரக்கச் சொல்வோம்
    'தமிழரின் தாகம்
    தமிழீழத் தாயகம்' pic.twitter.com/OHw9XCfBI8

இது குறித்து, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "நினைவேந்தல் நடத்த முயன்றதற்காக 100-க்கான தோழர்களுடன் கைதாகி உள்ளோம். படுகொலையான தமிழர்களுக்கு நினைவேந்தும் உரிமையைக் கூட உறுதி செய்யாத திமுக அரசு, மாநில உரிமை குறித்து பேசுவது விநோதமானது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் நடத்திய 17 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.