சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஏழாவது நாளாக வெகு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், "பாகிஸ்தான் அரசின் மதம் இஸ்லாமாக என்கின்றபோது, இந்திய அரசின் மதமாக இந்து மதத்தை அறிவிக்க வேண்டும். இதற்கு தடையாக இருப்பது அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம். இந்த சட்டத்தை இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதே சங்பரிவார்களின் நோக்கம். இன்று எல்லோரும் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறார்கள். அதனால் அதற்கு வாய்ப்பில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தச் சட்டத்தை நிறைவேற்றினால் முஸ்லீம்கள் வீதிக்கு வருவார்கள் என்று மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தெரியும். திட்டமிட்டுதான் முஸ்லீம்களின் வெறுப்பை கையிலெடுக்கிறார்கள். இதை எதிர்த்து இரண்டு மாத காலமாக போராடியுள்ளோம். இந்த முஸ்லீம்களின் போராட்டத்தில் ஏதேனும் வன்முறை நடைபெற்றது உண்டா என்று முதலமைச்சரிடம் சவால்விடலாம்" என்றார்.
இதையும் படிங்க: