சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். எனவே வாரணாசியில் உள்ள தமிழர்கள் வாழும் பகுதிகளில் பரப்புரை மேற்கொள்வது மகிழ்ச்சியை அளிக்கும் என்ற காரணத்தினால் அங்கு செல்கிறேன். அங்குள்ள தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே முன்பே முடிவு செய்துவிட்டனர்.
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது வழக்கமான ஒன்றுதான். பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைவதாக ஏற்படும் கருத்துகள் குறித்து தமாகாவின் தலைவர் ஜி.கே.வாசன் பதிலளித்துள்ளார். இரண்டு கட்சிகளும் இணைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என வாசன் தெரிவித்துவிட்டதால் மேற்கொண்டு இதில் கருத்து சொல்ல தேவையில்லை என அவர் கூறினார்.