ETV Bharat / city

கரோனா நோயாளிகள் ஒருவரும் இல்லை; பூஜ்ஜிய எண்ணிக்கையை சாதித்துக்காட்டிய சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை! - ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி'

சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 64 ஆயிரத்து 83 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும், கரோனா பாதித்தவர்கள் சிகிச்சையில் இல்லாத மருத்துவமனையாக இன்று மாறியுள்ளதாக அந்த மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரனிராஜன் தெரிவித்தார்.

கரோனா
கரோனா
author img

By

Published : Apr 12, 2022, 4:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்ட வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று (ஏப்.11) வரை 229 பேர் மட்மே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், சென்னையில் மட்டும் 95 பேர் கரோனா தொற்றால் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

கரோனா பாதிப்புகள்: சென்னையில் கரோனா பாதித்தவர்களுக்கு சென்னை ஓமந்தூரார், கீழ்பாக்கம், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. இதில் சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி ஓமனில் இருந்து காஞ்சிபுரம் வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம்

தமிழ்நாட்டில் முதன்முதலாக தொற்று பாதிக்கப்பட்ட அவருக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல் அலை, 2ஆம் அலையின் போது கரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோதும் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் கழித்து கரோனா இல்லாத மருத்துவமனையாக, இம்மருத்துவமனை மாறியுள்ளது.

முதல் கரோனா நோயாளி வீடு திரும்பினார்: இதுகுறித்து சென்னை மருத்துவக்கல்லூி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் தேரனிராஜன் கூறும்போது, 'கரோனா தொற்று முதல் அலை முதல் தற்பொழுது வரையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 64 ஆயிரத்து 83 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதனால் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்ட யாரும் சிகிச்சை பெறவில்லை என்ற நிலையை எட்டியுள்ளோம்' என கூறினார்.

  • First time we have 0 patients at rggh my heart felt thanks to everyone to reach this milestone 🙏🙏🙏 pic.twitter.com/2iFoFNnESO

    — E.Theranirajan MRCPCH (uk)FRCPCH(uK) (@ETRajan1) April 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 21 பேருக்கு கரோனா பாதிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.