ETV Bharat / city

திரையரங்குகள் திறக்கப்படுமா? முதலமைச்சரை சந்திக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்!

சென்னை: தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கக் கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தியேட்டர் உரிமையாளர்கள் இன்று(அக்.20) நேரில் சந்திக்க உள்ளனர்.

Edappadi K. Palaniswami
Edappadi K. Palaniswami
author img

By

Published : Oct 20, 2020, 10:59 AM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக 6 மாதங்களுக்கும் மேல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு 50% இருக்கைகளுடன் அக்.15ஆம் தேதிமுதல் திறக்க அனுமதி அளித்தது.

ஆனாலும் தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திரையரங்கு உரிமையாளர்கள் நேரில் சந்தித்துப் பேசுகின்றனர்.

அந்தப் பேச்சுவார்த்தையில் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்படுமா என எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை வெளியீட்டிற்காக பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திரையரங்கு திறப்பு குறித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.