சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 லிருந்து 60ஆக உயர்த்தி அறிவித்துள்ளார். இது அரசுப் பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.
இந்த உத்தரவு, தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.