ETV Bharat / city

விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்த நபரிடம் விசாரணை - Indigo Airlines

சென்னை: கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த பயணி முகக்கவசம் அணிய மறுத்ததால் விமான ஊழியா்கள் அவரை சென்னை விமான காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.

விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்த நபர்
விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்த நபர்
author img

By

Published : Apr 19, 2021, 12:25 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவுவதால், விமான பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து சென்னைக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் வந்துகொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் 49 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனா்.

சென்னை விமான நிலையம்

முகக்கவசம் அணிய மறுப்பு

அதில், கண்ணூரைச் சோ்ந்த பிரதீப் குமாா் (46) என்ற மென்பொறியாளரும் அந்த விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தாா். அவர் மட்டும் விமானத்திற்குள் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளாா்.

இதைப்பார்த்த விமான பணிப்பெண்கள் அவரை முகக்கவசம் அணியும்படி கூறியும், அவா் அணிய மறுத்துவிட்டாா். சகப்பயணிகளும் கூறியதையும் அவா் கேட்கவில்லை.

இதையடுத்து, விமான கேப்டனிடம் விமான பணிப்பெண்கள் புகாா்செய்தனா். தொடர்ந்து, விமான கேப்டன் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து, நேற்று நள்ளிரவு (ஏப். 18) சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து விமானம் தரையிறங்கியது. உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்கள் விமானத்திற்குள் சென்று, முகக்கவசம் அணியாமல் விமான பணிப்பெண்களிடம் பிரச்சினைசெய்த பயணியிடம் விசாரித்தனா்.

இண்டிகோ ஏா்லைன்ஸ்

அப்போதும், அவா் சரிவர பதில் கூறவில்லை. இதையடுத்து, பயணி பிரதீப்குமாரை விமானத்தை விட்டு, கீழே இறக்கினா். அத்தோடு, அவரை இண்டிகோ ஏா்லைன்ஸ் பாதுகாப்பு அலுவலர்கள், சென்னை விமான நிலைய காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.

அவா் மீது, விமானத்திற்குள் முகக்கவசம் அணியாமல் பயணித்து, கரோனா பாதுகாப்பு விதிமுறையை மீறியதோடு மட்டுமல்லாமல், முகக்கவசம் அணிய கூறிய விமான ஊழியா்களை மிரட்டியதாகவும் வழக்குப்பதிவுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனா். இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.